மகான் கோஷ்
குரு ஷாபாத் ரத்னகார் மகான் கோஷ் (Guru Shabad Ratnakar Mahan Kosh), என்பது பஞ்சாபி மொழியின் கலைக்களஞ்சியமாகும். இது மகான் கோஷ் எனும் பிரபலமான பெயராலே அறியப்படுகிறது. பாய் கான் சிங் நாஃபா என்பவரால் பதினாங்கு வருடங்கள் செலவிட்டு இது தொகுக்கப்பட்டது. இதில் 64,263 உள்ளடக்கங்கள் அகரவரிசைப்படி தொகுக்கப்பட்டுள்ளன. இதுவே பஞ்சாபி மொழியின் முதல் கலைக்களஞ்சியம் ஆகும். இது முதலில் நான்கு தொகுதிகளாக அச்சிடப்பட்டு 13 ஆப்ரல் 1930 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இது கடைசியாக 1981 ஆம் ஆண்டு ஒரே தொகுப்பாக வெளியாகி மூன்று பதிப்புகள் அச்சிடப்பட்டது. பஞ்சாபி பல்கலைக்கழகம் இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டது.[1]