மகாபாத் ஆறு
மகாபாத் ஆறு (Mahabad River, பாரசீக மொழி: مهابادرود ) என்பது ஈரானின் மகாபாத் மாவட்டத்தில் உள்ள ஒர் உள்வடிகால் ஆறாகும். இது 36°46′03″N 45°42′06″E என்ற புவியியல் தரவில் அமைந்துள்ளது. கவுடர் மற்றும் பெய்டாஸ் ஆறுகள் சமவெளியின் தெற்கு உயரத்தில் இருந்து உருவாகி இணையாக வடக்கு நோக்கி ஓடுகின்றன. பின்னர் இரு ஆறுகளும் இணைந்து மகாபாத் அணை நீர்த்தேக்கத்தை உருவாக்கி மகாபாத் ஆறாக தொடர்ந்து பாயும் இந்த ஆறு உருமியா உப்பு ஏரியின் தெற்கு முனையில் கலக்கிறது.[1]
மேற்கு அசர்பைசான் மாகாணத்தின் மகாபாத் நகருக்கு அருகில் உள்ள மகாபாத் அணை இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Nazari-Sharabian, Mohammad; Taheriyoun, Masoud; Ahmad, Sajjad; Karakouzian, Moses; Ahmadi, Azadeh (February 2019). "Water Quality Modeling of Mahabad Dam Watershed–Reservoir System under Climate Change Conditions, Using SWAT and System Dynamics" (in en). Water 11 (2): 394. doi:10.3390/w11020394. பன்னாட்டுத் தர தொடர் எண்:2073-4441.