மகாமக குளம் நெரிசல்
மகாமக குளம் நெரிசல் (Mahamaham stampede) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் கும்பேசுவரர் கோயில் அருகில் அமைந்துள்ள மகாமக குளத்தில் 1992 இல் நடைபெற்ற மகாமக திருவிழாவில் நிகழ்ந்த விபத்தை குறிப்பதாகும்.


12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமக திருவிழாவில் 1992 இல் நடைபெற்ற மகாமக திருவிழாவில், அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா மற்றும் அவரது தோழி வி. கே. சசிகலா பெப்ரவரி 18 அன்று நடைபெற்ற மகாமக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது ஏற்பட்ட நெரிசலின் போது மகாமகக் குளக்கரையில் அமைந்திருந்த ஒரு கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்து 60 நபர்கள் பலியானார்கள்.[1][2][3]