மகாராணி திவ்யா சிங்
மகாராணி திவ்யா சிங் (Maharani Divya Singh) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1963 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவையின் முன்னாள் உறுப்பினர் என்று அறியப்படுகிறார். பாரதிய சனதா கட்சியின் வேட்பாளராக இராசத்தான் மாநிலத்தில் உள்ள பரத்பூர் தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]
மகாராணி திவ்யா சிங் Maharani Divya Singh | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1996–1998 | |
முன்னையவர் | கிருசுணேந்திர கௌர் (தீபா) |
பின்னவர் | கே. நட்வர் சிங் |
தொகுதி | பரத்பூர், இராசத்தான் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 6 நவம்பர் 1963 |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய சனதா கட்சி |
துணைவர் | விசுவேந்திர சிங் |
பிள்ளைகள் | யுவராச்சு அனிருத்தா பரத்பூர் |
தொழில் | அரசியல்வாதி |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுமகாராணி திவ்யா சிங் 1963 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் இலக்னோவில் பிறந்தார். பிப்ரவரி 15, 1989 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதியன்று இவர் மகாராச்சு விசுவேந்திர சிங்கை மணந்தார். [1]
கல்வி & தொழில்
தொகுஇசபெல்லா தோபர்ன் கல்லூரியில் திவ்யா கலை பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றார். 1996 ஆம் ஆண்டில் பரத்பூர் மாவட்ட மன்றத்தில் உறுப்பினரானார். பின்னர், 11 ஆவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] 2012 ஆம் ஆண்டில் திவ்யா தனிப்பட்ட காரணங்களுக்காக 2011 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட இராசத்தான் பொது சேவை ஆணையத்தின் உறுப்பினர் பதவியிலிருந்து பதவி விலகினார்.[2]