பரத்பூர், ராஜஸ்தான்

பரத்பூர் (Bharatpur) என்பது இந்திய மாநிலமான ராஜஸ்தானில் உள்ள ஒரு நகரமாகும். இந்த நகரம் இந்தியாவின் தலைநகரான புது தில்லிக்கு தெற்கே 180 கி.மீ தொலைவிலும், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து 178 கி.மீ தொலைவிலும், உத்தரபிரதேசத்தின் ஆக்ராவிலிருந்து மேற்கே 55 கி.மீ தொலைவிலும், உத்தரபிரதேசத்தின் மதுராவிலிருந்து38 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது பரத்பூர் மாவட்டத்தின் நிர்வாக தலைமையகமும் ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூர் பிரிவின் தலைமையகமும் ஆகும். பாரத்பூர் இந்தியாவின் தேசிய தலை நகரப் பிராந்தியத்தின் ஒரு பகுதியாகும் . [1] இந்த நகரம் முந்தைய, பரத்பூர் மாநிலத்தின் தலைநகராக இருந்தது. இது 2014 இல் 65 வார்டுகளைக் கொண்ட ஒரு மாநகராட்சியாக மாறியது. [2] [3] [4]

பரத்பூர்
லோகாகர்
மாநகரம்
இலட்சுமி விலாச அரண்மனை
இலட்சுமி விலாச அரண்மனை
அடைபெயர்(கள்): லோகாகர்
பரத்பூர் is located in இந்தியா
பரத்பூர்
பரத்பூர்
ராஜஸ்தானில் பரத்பூரின் அமைவிடம்
பரத்பூர் is located in இராசத்தான்
பரத்பூர்
பரத்பூர்
பரத்பூர் (இராசத்தான்)
ஆள்கூறுகள்: 27°13′N 77°29′E / 27.22°N 77.48°E / 27.22; 77.48
நாடு India
மாநிலம்ராஜஸ்தான்
மாவட்டம்பரத்பூர்
பெயர்ச்சூட்டுபாரத்- இப்பகுதியில் பிரபலமான ஒரு வரலாற்று வீரர்
அரசு
 • வகைநகராட்சி அமைப்பு
 • நிர்வாகம்பரத்பூர் மாநகராட்சி
ஏற்றம்183 m (600 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்254,846
மொழிகள்
 • அலுவல்இந்தி, ஆங்கிலம்
 • பிறபிராஜ் பாஷா, மேவதி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்321001
தொலைபேசி குறியீடு(+91) 5644
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுஐ.எசு.ஓ 3166-2:ஐ.என்
வாகனப் பதிவுஆர்ஜே-05
இணையதளம்http://bharatpur.rajasthan.gov.in

இந்த நகரம் சராசரியாக 183 மீட்டர் (600 அடி) உயரத்தில் உள்ளது. இது "ராஜஸ்தானின் கிழக்கு நுழைவாயில்" என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் பரத்பூர் கோட்டை "லோகாகர்" என்று அழைக்கப்படுகிறது.

வரலாறு தொகு

பரத்பூர் சுதேச மாநிலமான பரத்பூரின் தலைநகராக இருந்தது. பரத்பூர் நகரம் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆங்கிலேயர்களால் முற்றுகையிடப்பட்டது. இராஜபுதனத்திலிருந்து ஆங்கிலேயர்களுடன் ஒப்பந்தம் செய்த முதல் மாநிலங்களில் இதுவும் ஒன்றாகும்.

புள்ளிவிவரங்கள் தொகு

பரத்பூரில் உள்ள மதங்கள்
மதங்கள் சதவீதம்
இந்து
93.30%
முஸ்லிம்
3.70%
சீக்கியர்
1.94%
சைனம்
0.73%

2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி,[5] பரத்பூர் மாவட்டத்தில் 2,548,462 மக்கள் தொகை இருக்கின்றனர். இதில் ஆண்கள் 1,355,726 பேரும், பெண்கள் 1,192,736 பேரும் உள்ளனர். பரத்பூரின் சராசரி கல்வியறிவு விகிதம் 82.13% ஆகும். இது தேசிய சராசரியான 74.04% ஐ விட அதிகமாகும்; ஆண்களின் கல்வியறிவு 90.41% மற்றும் பெண் கல்வியறிவு 72.80% என இருக்கிறது.

மேலும் காண்க தொகு

மேலும் படிக்க தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பரத்பூர்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

குறிப்புகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரத்பூர்,_ராஜஸ்தான்&oldid=3539267" இருந்து மீள்விக்கப்பட்டது