மகாலட்சுமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

சென்னை, ஆவடி, பருத்திப்பட்டில் உள்ள மகளிர் கலைக் கல்லூரி

மகாலட்சுமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (Mahalakshmi Womens College Of Arts & Science), என்பது தமிழ்நாட்டின், சென்னை, ஆவடிக்கு அருகில் உள்ள பருத்திப்பட்டில் அமைந்துள்ள மகளிர் கலைக் கல்லூரி ஆகும். இக்கல்லூரி 1998 இல் துவக்கப்பட்டது.

மகாலட்சுமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வகைசுயநிதி கல்லூரி
உருவாக்கம்1908
முதல்வர்முனைவர் ந. பூமா
அமைவிடம்சென்னை, ஆவடி, பருத்திப்பட்டி, தமிழ்நாடு, இந்தியா

பாடத் திட்டங்கள்தொகு

இக்கல்லூரியில் கலை, அறிவியல் துறைகளில் 14 இளங்கலை பட்டப்படிப்புகளும், இரண்டு முதுகலை பட்டப் படிப்புகளும் வழங்கப்படுகின்றன. இங்கு வழக்கமான துறைகளுடன் காட்சித் தொடர்பியல், ஹோம் சயின்ஸ், இன்டீரியர் டெகரேசன் அண்ட் டெகார், உளவியல் போன்ற நவீனத் துறைகளும் செயல்படுகின்றன. வேலைவாய்ப்பு பிரிவின் மூலமாக ஆண்டுதோறும் பல்வேறு நிறுவனங்கள் மாணவிகளுக்கு ஊக்கத் தொகையுடன் பயிற்சியளித்து, வேலைவாய்ப்பை உருவாக்கிவருகின்றன. நாட்டு நலப்பணியின் ஒரு பகுதியாக எயிட்சு விழிப்புணர்வுக்காக மனித சங்கிலி, மழைநீர் சேகரிப்பு விழிப்புனர்வுக்காக பேரணி, தூய்மை இந்தியா திட்டம் போன்றவை முன்னெடுக்கப்படுகின்றன.