மகாலிங்கேசுவரர் கோயில்

தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
(மகாலிங்கேசுவரர் ஆலயம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மரகதவல்லி உடனுறை மகாலிங்கேசுவரர் கோயில் என்பது தமிழ்நாட்டின், திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஒன்றியம், தவசிமடை (624 304) கிராமத்தில் அமைந்துள்ளது[1]. இங்கு பரத்வாசர் எனும் பத்து அடி உயரமுடைய முனிவர் வாழ்ந்து சமாதி அடைந்த இடம் என நம்பப்படுகிறது. அவருடைய சமாதி அங்குள்ளது. அவர் ஆன்மீக 'ஒடுக்கம்' அடைந்த இடமாதலால் இவ்விடம் 'ஒடுக்கம்' என்ற பெயரிலேயே அழைக்கப்பெறுகிறது. இராமர் தம் வனவாசத்தின் போது அனுமனோடு தன் உணவைப் பங்கிட வாழை இலையின் நடுவே 'கோடு' போட்டது இத்தலமே என்ற தொன் நம்பிக்கை மக்களிடம் உலவுகிறது.

சிறுமலையின் அடிவாரத்தில் அமைந்த இக்கோயில் பன்னெடுங்காலமாக மரங்கள் அடர்ந்து, பல அரிய மூலிகைகளின் உறைவிடமாக இருந்தது. கடந்த பத்தாண்டுகளில் இக்கோயில் 'மகம்' நட்சத்திரத்துக்குரிய கோயிலாக உள்ளது[2]. பிரதோசம் உட்பட சிவபெருமானுக்கு உகந்த நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப் பெறுகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் இவ்வாலயத்திற்கு வருகை புரிகின்றனர்.

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு

(10°16′37″N 78°02′35″E / 10.2770°N 78.0431°E / 10.2770; 78.0431) - புவியியல் ஆள்கூறுகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாலிங்கேசுவரர்_கோயில்&oldid=4109781" இலிருந்து மீள்விக்கப்பட்டது