மகா கணபதி மகாமாயா கோயில்

மகா கணபதி மகாமாயா கோயில் (Maha Ganapathi Mahammaya Temple) என்பது கர்நாடக மாநிலத்தின் வட கன்னட மாவட்டத்தில் சிராலியில் அமைந்துள்ளது. இது, கவுட சரஸ்வத் பிராமணச் சமூகத்தின் குலதேவதைக் கோயிலாகும். மேலும், காமத், பட், புராணிக், பிரபு, ஜோயிஷி, மல்லியாஸ், குட்வா மற்றும் நாயக் குடும்பங்களின் குலதேதைக் கோயிலாகவும் இருக்கிறது. இது, பத்கல் அல்லது முருதீசுவராவிலிருந்து ஐந்து நிமிட பயணத்தில் அமைந்துள்ளது. இந்த கோயில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இது 1904 இல் புதுப்பிக்கப்பட்டது. [1]

Map

இந்த குடும்பங்கள் கோயிலின் குலவர்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. சுமார் 400–500 ஆண்டுகளுக்கு முன்பு கோவாவிலிருந்து குடிபெயர்ந்த பக்தர்களால் இந்த கோயில் நிறுவப்பட்டது. பிள்ளையாரும், மகாமாயாவும் ( சாந்ததுர்கா ) இங்கு முக்கிய தெய்வங்களாக இருக்கின்றனர்.

பின்னணி

தொகு

பொ.ச.1560இல் போர்த்துகீசிய ஆட்சியாளர்கள் பின்பற்றிய விரோத மதக் கொள்கைகளின் காரணமாக, பக்தர்கள் கோவாவை விட்டு வெளியேறினர். சிலைகளை அவர்களுடன் எடுத்துச் செல்ல முடியாததால், அவர்கள் தெய்வங்களின் உடற்பகுதியின் மாதிரியை மட்டும் தங்களுடன் எடுத்துக்கொண்டு பத்கலை அடைந்தனர். உடனடியாக ஒரு கோவிலைக் கட்ட முடியாமல் போனதால், இந்த இரண்டு சின்னங்களையும் ஒரு பக்தரின் கடையில் வைத்திருந்தார்கள். அங்கே தினமும் தெய்வங்களுக்கு பூசை முதலிய சடங்குகளை மேற்கொண்டு வந்தனர். பின்னர், சிராலியில் ஒரு கோயிலைக் கட்டி அதில் இத்தெய்வங்களை வைத்து வணங்க ஆரம்பித்தனர். இந்த கோவிலில் “மாலி” என்று அழைக்கப்படும் தனித்துவமான தரிசன சேவை உள்ளது. [2]

அருகிலுள்ள ஆர்வமுள்ள இடங்கள்

தொகு

இக் கோயிலின் அருகே சித்ராபூர் மடமும் முருதீசுவரா கோவிலும் அமைந்துள்ளது. மேலும், கடற்கரையும் உள்ளது. [3]

புகைப்படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. B. N. Sri Sathyan (1985). Karnataka State Gazetteer: Uttara Kannada. Director of Print., Stationery and Publications at the Government Press. p. 229.
  2. http://www.gsbkonkani.net/TEMPLES/SHIRALI,%20SHRI%20MAHAGANAPATHI%20%20MAHAMAYA%20TEMPLE%20(MGM%20TEMPLE).htm
  3. https://www.techtraveleat.com/sri-maha-ganapathy-mahamaya-gsb-temple-shirali-karnataka/

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Maha Ganapathi Mahammaya Temple
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகா_கணபதி_மகாமாயா_கோயில்&oldid=3141296" இலிருந்து மீள்விக்கப்பட்டது