மகிளா பக்சு

மகிளா பக்சு (Mahila Paksh) என்பது மத்தியப் பிரதேசத்தில் உள்ள குவாலியரிலிருந்து இந்தியில் வெளியிடப்படும் இந்தியப் பெண்கள் செய்தித்தாள் ஆகும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் முதல் பல்வேறு துறைகளில் பெண்கள் பெற்ற வெற்றி வரையிலான சிக்கல்களையும் பாடங்களையும் உள்ளடக்கிய செய்திகளை இது வெளியிடுகிறது. இந்த செய்தித்தாள் சிறீவசுதவா குடும்பத்தினரால் வெளியிடப்பட்டது. ஆண்டுக்கு இரண்டு டாலர்கள் மற்றும் ஐம்பது செண்டு என்ற கட்டணத்தில் நபர்களைச் சந்தாதாரர்களை இணைப்பதன் மூலம் செயல்படுகிறது.

மகிளா பக்சு நாளிதழின் தலைமை ஆசிரியர் சாம்ன்வி குமார் கருத்தின்படி, இந்தப் பத்திரிகையின் நோக்கமாக, "பெண்களுக்கு சமூகப் பிரச்சினைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், தங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். பெண்கள் தங்களைப் புரிந்துகொள்வதில்லை மற்றும் தங்களின் திறனை உணர்வதில்லை. இவர்களின் திறன், திறமை மற்றும் மகளிரின் திறனை மற்றவர்கள் அங்கீகரிக்க வேண்டும் மகளிர் தங்கள் சொந்த சுதந்திரமான முடிவுகளை தங்களை உணர்ந்தால் தான் எடுக்க முடியும்" என்பதாகும்.[1]

இந்தச் செய்தித்தாள் இந்தியா முழுவதிலிமிருந்து பெண்களின் வெற்றிக் கதைகளைப் பதிவு செய்கின்றது. ஆனால் ஒப்பீட்டளவில் உரிமையற்ற மற்றும் பொதுவாக அவர்களின் உணர்வுகள் அல்லது சூழ்நிலைகளைப் பற்றிப் பேசுவதைத் தடுக்கும் ஏழை மற்றும் கல்வியறிவற்ற பெண்களால் தொகுக்கப்பட்ட பல கதைகளும் இதில் அடங்கும். இக்கதைகள் அனைத்தும் தொகுப்பாசிரியர்கள் உதவியுடன் வெளியிடப்படுகின்றன. இது குறித்து பெண்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்படுகின்றன.

மத்தியப் பிரதேச மாநில மகளிர் ஆணையர் காந்தா தோமர், மகிளா பக்சு குறித்து, "மகிளா பக்சு பெண்களின் பல்வேறு பிரச்சனைகளை முன்வைக்கும் மத்தியப் பிரதேசத்தின் தனித்துவமான செய்தித்தாள். இந்த செய்தித்தாளின் முன்முயற்சிகள் மூலம், இப்பகுதியில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள எங்களுக்கு நிறைய உதவிகள் கிடைத்துள்ளன. ஆண் ஆதிக்க சமூகத்தில் இந்த மகளிர் பத்திரிகை மகளிர் மேம்பாட்டிற்கு அற்புதமான பணியினைச் செய்கிறது" எனக் கருத்து தெரிவிக்கின்றார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "India's first women-centric newspaper | Newswatch". Newswatch.in. பார்க்கப்பட்ட நாள் 2014-05-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகிளா_பக்சு&oldid=3665338" இலிருந்து மீள்விக்கப்பட்டது