மகிள்
ஆரி பாட்டர் புதினத் தொடரில், மகிள் என்பது மந்திர குடும்பத்தில் பிறக்காமலும், எந்தவொரு மந்திர திறமையும் இல்லாத ஒரு நபரை அழைபதற்கு பயன்படுத்தும் வார்த்தை ஆகும். மகிள்கள் தமது இரத்தத்தில் ஒரு துளி கூட மந்திர இரத்தம் இல்லாதவர்கள் எனவும் விபரிக்கப் படுகின்றனர். இது இசுகுய்ப்பு (squib), மட்பிளட்டு (Mudblood) என்ற வார்த்தைகளில் இருந்து முற்றாக வேறுபடுகின்றது. அமெரிக்காவில் உள்ள மந்திர பிரபஞ்ச மந்திரவாத சமூகத்தில், இவ்வார்த்தைக்கு ஒப்பாக நோ-மாஜ் (No-Maj) என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகின்றது.
ரௌலிங் "மகிள்" என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் இலகுவாக ஏமாறக் கூடியவர்களை கூற பயன்படுத்தும் வார்த்தையான "மக்"" ("mug") என்ற வார்த்தையிலிரிந்து உருவாக்கியதாக அவர் கூறியுள்ளார். [1]