மகூதானர் ஓநாய் சரணாலயம்

இந்தியாவில் உள்ள ஓநாய் சரணாலயம்

மகூதானர் ஓநாய் சரணாலயம் (Mahuadanr Wolf Sanctuary) இந்தியாவின் சார்க்கண்டு மாநிலத்தின் இலாத்தேகார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வனவிலங்கு சரணாலயம் ஆகும். பெத்லா தேசிய பூங்காவின்[1][2] ஒரு பகுதியான இச்சரணாலயம் 1976 ஆம் ஆண்டு ஓநாய் இனத்தை பாதுகாப்பதற்காக ஒரு வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.[3]

மகூதானர் ஓநாய் சரணாலயம்
Mahuadanr Wolf Sanctuary
Map showing the location of மகூதானர் ஓநாய் சரணாலயம் Mahuadanr Wolf Sanctuary
Map showing the location of மகூதானர் ஓநாய் சரணாலயம் Mahuadanr Wolf Sanctuary
இந்தியாவில் அமைவிடம்
Map showing the location of மகூதானர் ஓநாய் சரணாலயம் Mahuadanr Wolf Sanctuary
Map showing the location of மகூதானர் ஓநாய் சரணாலயம் Mahuadanr Wolf Sanctuary
மகூதானர் ஓநாய் சரணாலயம் (இந்தியா)
அமைவிடம்இலாத்தேகார் மாவட்டம்,சார்க்கண்டு, இந்தியா
ஆள்கூறுகள்23°42′N 84°02′E / 23.700°N 84.033°E / 23.700; 84.033
பரப்பளவு63.25 கி.மீ2.
நிறுவப்பட்டது1976
நிருவாக அமைப்புசுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை , சார்க்கண்டு அரசு
வலைத்தளம்www.forest.jharkhand.gov.in

வரலாறு

தொகு

பாலமாவு புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியாக இருந்த இது 1976 ஆம் ஆண்டில், இந்திய ஓநாய்களின் பாதுகாப்பிற்காக ஒரு வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. சரணாலயம் 63.25 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது. நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான இனப்பெருக்க காலத்தில் ஓநாய்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. காடுகளில் ஏராளமான குகைகள் உள்ளன. 1979 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட முதல் கணக்கின்படி சரணாலயத்தில் 49 ஓநாய்கள் இருந்தன. 2004 ஆம் ஆண்டில் இத்தொகை 568 ஆக அதிகரித்தது. 2009 ஆம் ஆண்டில் இத்தொகை 58 ஓநாய்களாகவும்[4] 2020 ஆம் ஆண்டில் 120 ஓநாய்களாகவும் இருந்தன.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Counting of wolves to begin in Jharkhand's Mahuadanr Wolf Sanctuary from January next Year". 17 December 2021. https://www.etvbharat.com/english/national/bharat/counting-of-wolves-to-begin-in-jharkhands-mahuadanr-wolf-sanctuary-from-january-next-year/na20211217214406051. 
  2. "Human intervention force wolves to abandon den in their lone sanctuary". 9 November 2021. https://timesofindia.indiatimes.com/city/ranchi/human-intervention-force-wolves-to-abandon-den-in-their-lone-sanctuary/articleshow/87593046.cms. 
  3. "झारखंड में देश के इकलौते भेड़िया अभयारण्य में दिखा भेड़िया, कैमरे में कैद हुई तस्वीर". 4 October 2021. https://www.prabhatkhabar.com/state/jharkhand/latehar/jharkhand-news-wolf-seen-in-the-only-wolf-sanctuary-of-the-country-the-picture-was-captured-in-the-camera-grj. 
  4. "Official apathy hits country's lone wolf sanctuary". timberwolfinformation. பார்க்கப்பட்ட நாள் 29 July 2022.
  5. "लाकडाउन में बढ़ गई भेड़ि‍यों की आबादी, लातेहार में है देश का एकमात्र भेड़‍िया अभयारण्य". 16 September 2021. https://www.jagran.com/jharkhand/ranchi-population-of-wolves-increased-in-lockdown-india-only-wolf-sanctuary-in-palamu-jharkhand-jagran-special-22023977.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகூதானர்_ஓநாய்_சரணாலயம்&oldid=3483170" இலிருந்து மீள்விக்கப்பட்டது