மக்கள் பெயர்கள்

தமிழ்மொழியில் மக்களுக்குச் சூட்டப்படும் பெயர்கள் எந்தெந்த அடிப்படையில் அமையும் என்பதைத் தொல்காப்பியம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலேயே வகுத்துத் தெளிவுபடுத்தியுள்ளது. [1] மக்கள் என்போர் உயர்திணை. உயர்திணைப் பெயர்கள் 11 பாங்குகளில் அமையும். இந்த வகையில் அமையும் பிற பெயர்களும் உண்டு என அது குறிப்பிடுகிறது. அடைப்புக் குறிக்குள் அப் பெயர்களுக்கு இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டுகள் வருமாறு:

  1. நிலப்பெயர் (அருவாளர், சோழியன்)
  2. குடிப்பெயர் (மலையமான், சேரமான்)
  3. குழுவின் பெயர் (அவையத்தார், அத்திகோசத்தார்)
  4. வினைப்பெயர் (தச்சன், கொல்லன்)
  5. உடைப்பெயர் (அம்பர் கிழான், பேரூர் கிழான், வெற்பன், சேர்ப்பன்)
  6. பண்புகொள் பெயர் (கரியான், செய்யான்)
  7. பல்லோர்க் குறித்த முறைப்பெயர் (தந்தையர், தாயர்)
  8. பல்லோர்க் குறித்த சினைநிலைப் பெயர் (பெருங்காலர், பெருந்தோளர்)
  9. பல்லோர்க் குறித்த திணைநிலைப் பெயர் (பார்ப்பார், அரசர், வணிகர், வேளாளர், ஆயர், வேட்டுவர்)
  10. கூடிவரு வழக்கின் ஆடியற் பெயர் (பட்டி புத்திரர், சங்கிராமத்தார்)
  11. இன்று இவர் என்னும் எண்ணியற் பெயர் [2] (ஒருவர், இருவர், மூவர், முப்பத்து மூவர்)

அடிக்குறிப்பு

தொகு
  1. தொல்காப்பியம், பெயரியல், நூற்பா 11
  2. இத்துணையர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்கள்_பெயர்கள்&oldid=1562490" இலிருந்து மீள்விக்கப்பட்டது