மங்கள மணி (Mangala Mani) ஓர் இந்திய அறிவியலாளர். அந்தாட்டிக்காவில் ஒரு வருடத்திற்கு மேல் ஆய்வு மேற்கொள்ளும் முதல் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன பெண் அறிவியலாளர் இவர்தான். மணி பெண்கள் அறிவியல் தொடருக்கான பிபிசியின் 100 பெண்களுள் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மங்கள மணி
பிறப்புஇந்தியா
அமைப்பு(கள்)இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்

இளமை

தொகு

இவரது குடும்பத்தில் பிறந்த ஆறு குழந்தைகளில் மணி மூத்தவர். இவர் சைபாபாத் ஹோலி மேரி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிக் கல்வியினை முடித்தார்.[2] செவ்வாய்க் கிரகத்தைப் பற்றிய நாசா செய்தித்தாள் கட்டுரையைப் படித்த மணி, விண்வெளி அமைப்பில் சேர தூண்டப்பட்டார். ஐதராபாத்தில் உள்ள மசாப் குள அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான பட்டயப் படிப்பினை வானொலி தொழில்நுட்ப கருவியில் பெற்றார். இந்த வகுப்பில் பயின்ற 80 பேரில் இவர் மட்டுமே மாணவி.[3]

மணி பட்டய படிப்பினை முடித்த சிறிது காலத்தில் பாலாநகரில் உள்ள எச்ஏஎல்-ல் தனது தொழிற்பயிற்சியைத் தொடங்கினார். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்துடனான நேர்காணலுக்கு இவர் அழைக்கப்பட்டார். நேர்காணலுக்குப் பிறகு மூன்று வாரங்களுக்குள் இசுரோவில் சேருவதற்கான நியமன ஆணையைப் பெற்றார்.[4] இசுரோ ஆய்வாளர்கள் குழு 2018 திசம்பரில் இந்தியாவின் அந்தார்டிக்கா ஆராய்ச்சி நிலையமான பாரதியில் 403 நாள் பயணத்தை முடித்தது. அப்போது 56 வயதான மணி இந்த அணியிலிருந்த ஒரே பெண்மணி ஆவார். இவர் 23 பேர் கொண்ட பயணக் குழுவில் ஒருவராக இருந்தார். 14 சுற்றுப்பாதைகளில் 10 சுற்றுப்பாதைகள் பாரதிக்குத் தெரியும் வகையில் தரை நிலையத்தைப் பராமரித்தார்.[5][6]

மேற்கோள்கள்

தொகு
  1. Mary, S. B. Vijaya (2018-03-13). "ISRO's Mangala Mani and her expedition to Antarctica as the only woman scientist" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/life-and-style/isros-mangala-mani-and-her-expedition-to-antartica-as-the-only-woman-scientist/article23207197.ece. 
  2. Quint, The (2018-03-18). "ISRO's Mangala Mani Completes 400-Day Antarctica Mission" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-05.
  3. "National Girl Child Day 2020: Meet Mangala Mani – ISRO scientist in historic Antarctica mission" (in ஆங்கிலம்). 2020-01-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-05.
  4. "56-year-old first Isro woman to spend over a year in Antarctica". https://timesofindia.indiatimes.com/india/56-year-old-first-isro-woman-to-spend-over-a-year-in-antarctica/articleshow/63349832.cms. 
  5. Wadhwa, Mansi. "Mangala Mani: ISRO Scientist Who Was In The Historic Antarctica Mission" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-05.
  6. Srivastava, Priya SrivastavaPriya. "Meet Mangala Mani, the first woman scientist from ISRO to spend 403 days in Antarctica". https://timesofindia.indiatimes.com/travel/things-to-do/meet-mangala-mani-the-first-woman-scientist-from-isro-to-spend-403-days-in-antarctica/articleshow/63377949.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்கள_மணி&oldid=3883672" இலிருந்து மீள்விக்கப்பட்டது