மங்கோலியர்களின் ஐரோப்பியப் படையெடுப்பு

பதின்மூன்றாம் நூற்றாண்டின் மங்கோலியர்களின் ஐரோப்பியப் படையெடுப்பானது 1220கள் முதல் 1240கள் வரை நடைபெற்றது. கிழக்கு ஐரோப்பாவில் வோல்கா பல்கேரியா, குமனியா, மற்றும் கீவ் மற்றும் விளாடிமிர் போன்ற உருசிய சமஸ்தானங்களை மங்கோலியர்கள் அழித்தனர். நடு ஐரோப்பாவில் துண்டாகி இருந்த போலந்து மீது மங்கோலிய ராணுவங்கள் இருமுனை தாக்குதலைத் தொடுத்தன. போலந்து தாக்குதலானது லெக்னிகா யுத்தத்தில் (9 ஏப்ரல் 1241) உச்சத்தை அடைந்தது. அங்கேரியன் மீதான தாக்குதல் மொகி யுத்தத்தில் (11 ஏப்ரல் 1241) உச்சத்தை அடைந்தது.[1] காக்கேசியாவிலிருந்த சார்சியா ராச்சியம், மற்றும் செச்சனியர்கள் மற்றும் இங்குஷ் மக்கள் ஆகியோரின் மீதும் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. இந்தத் தாக்குதலுக்கான திட்டங்கள் தளபதி சுபுதையால் உருவாக்கப்பட்டு, படு கான் மற்றும் கதன் ஆகியோரால் தலைமைதாங்கப்பட்டன. கடைசியாக குறிப்பிடப்பட்ட இருவருமே செங்கிஸ் கானின் பேரன்கள் ஆவர். இவர்களது படையெடுப்புகள் பெரும்பாலான கிழக்கு ஐரோப்பிய பகுதிகளை தங்க நாடோடிக் கூட்டப் பேரரசுடன் இணைத்தன. தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்த ஐரோப்பிய இளவரசர்கள் மங்கோலியப் படையெடுப்பைத் எதிர்நோக்கியிருக்கும் அச்சமயத்தில் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வதுதான் ஒரே வழி என்பதை புரிந்து கொண்டனர். எனவே நடு ஐரோப்பாவின் பகுதிகளில் உள்ளூர் போர்கள் மற்றும் சண்டைகள் நிறுத்தப்பட்டன. மங்கோலியர்கள் பின் வாங்கிய பிறகே சண்டைகள் திரும்ப ஆரம்பிக்கப்பட்டன.[2] ஆரம்பகால படையெடுப்புகளுக்குப் பின்னர் சோதனை தாக்குதல்கள் மற்றும் தண்டனை கொடுக்கும் பயணங்கள் பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை தொடர்ந்தன.

மங்கோலியர்களின் ஐரோப்பியப் படையெடுப்பு
மங்கோலியப் படையெடுப்புகளும் வெற்றிகளும் பகுதி

மங்கோலியர்களின் ஐரோப்பிய படையெடுப்பு 1236-1242
நாள் பதின்மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் பின்பகுதி வரை
இடம் கிழக்கு மற்றும் நடு ஐரோப்பா, மற்றும் காக்கேசியா
பல்வேறு ஐரோப்பிய அரசியல் அமைப்புகள் அடிபணிய வைக்கப்பட்டன அல்லது சோதனை பயணங்களுக்கு உள்ளாகி கப்பம் கட்ட வைக்கப்பட்டன. பெரும்பாலான கிழக்கு ஐரோப்பா, ஆசியா மற்றும் ஐரோப்பாவின் மக்கள் தொகைகள், கலாச்சாரங்கள் மற்றும் அரசியல் அமைப்புகள் அழிவுக்கு உள்ளாயின.
நிலப்பகுதி
மாற்றங்கள்
வோல்கா பல்கேரியா, குமனியா, மற்றும் கீவ ருஸ்ஸின் சமஸ்தானங்கள் மங்கோலியப் பேரரசால் வெல்லப்பட்டன. சார்சியா இராச்சியம் அடிபணிய வைக்கப்பட்டது. அங்கேரி ராச்சியத்தின் பகுதிகள் தற்காலிகமாக மங்கோலியப் பேரரசால் கட்டுப்படுத்தப்பட்டன. கிழக்கு மற்றும் நடு ஐரோப்பா மற்றும் வடக்கு காக்கேசியா ஆகிய பகுதிகள் தொடர்ந்து மங்கோலியர்களின் சோதனை பயணங்கள் மற்றும் படையெடுப்புகளுக்கு உள்ளாகின.

உசாத்துணை

தொகு
  1. Thomas T. Allsen (2004-03-25). Culture and Conquest in Mongol Eurasia. Cambridge University Press. ISBN 9780521602709.
  2. Francis Dvornik (1962). The Slavs in European History and Civilization. Rutgers UP. p. 26. ISBN 9780813507996.