மசூந்தா ஏரி

இந்தியாவின் தானே நகரிலுள்ள ஓர் ஏரி

மசூந்தா ஏரி (Masunda Lake) இந்தியாவின் மகாராட்டிர மாநிலம் தானே நகரில் அமைந்துள்ள ஓர் ஏரியாகும். [1] தலவ்பாலி ஏரி என்றும் இதை அழைக்கிறார்கள். 19.11 வடக்கு மற்றும் 72.58 கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் மசூந்தா ஏரி அமைந்துள்ளது. மகாராட்டிரா மாநிலத்தின் மிக அழகிய ஏரிகளில் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது. ஏரியில் ஒரு சிறிய தீவும் அங்கு சிவன் கோயில் ஒன்றும் அமைந்துள்ளன. [2] மிகவும் பிரபலமான மசூந்தா ஏரியில் படகு மற்றும் நீர் துள்ளுந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஏரியின் முன்புறத்தில் பொழுபோக்குக்கான பிரபல கத்கரி இரங்காயதன் என்ற நாடக அரங்கம் உள்ளது. இது மகத்தான கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த தளமாகும்.

வரலாறு

தொகு

முன்னதாக மசூந்தா ஏரி கிழக்கில் கோபனேசுவர் மந்திர் வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. ஆனால் 1950 ஆம் ஆண்டுகளில் ஒரு புதிய சாலையின் கட்டுமானம் காரணமாக அதன் பரப்பளவு கடுமையாகக் குறைந்து போனது. [3]

போக்குவரத்து வசதி

தொகு

மசூந்தா ஏரி தானே இரயில் நிலையத்திலிருந்து சுமார் 15 நிமிடங்கள் நடந்து செல்லும் தொலைவில் உள்ளது. உள்ளூர் மக்களுக்கு மாலை நேர ஓய்வு மற்றும் படகு சவாரி போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கு மிகவும் பிடித்த இடமாக உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. HolidayIQ.com. "Masunda Talao (Talao Pali) Lake in Thane - Video Reviews, Photos, History - HolidayIQ". www.holidayiq.com. Archived from the original on 2020-08-15. பார்க்கப்பட்ட நாள் 2021-06-10.
  2. "Travel Guide For Masunda Lake (Talao Pali) - Pune Holiday Packages". www.travelmyglobe.com.
  3. "Travel Guide For Masunda Lake (Talao Pali) - Pune Holiday Packages". www.travelmyglobe.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மசூந்தா_ஏரி&oldid=3566108" இலிருந்து மீள்விக்கப்பட்டது