மச்ச சம்ஹார மூர்த்தி
மச்ச சம்ஹார மூர்த்தி, அறுபத்து நான்கு சிவனின் திருமேனிகளுள் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும். மச்சம் என்றால் மீன் என்று பொருள். மீன் வடிவெடுத்து வந்த விஷ்ணுவை கொன்ற சிவனின் திருவுருவம் மச்ச சம்ஹார மூர்த்தி என்று அழைக்கப்படுகிறது.
புராணம்தொகுசோமுகாசுரன் மூன்று லோகத்தினராலும் யாவராலையும் அழிக்க முடியாத வரத்தினை சிவனிடமிருந்துப் பெற்றிருந்தான். அந்த அகந்தையில் பிரம்மனிடம் சென்று வேதங்கள் நான்கையும் பிடுங்கிக் கொண்டு கடலிலுள் சென்று மறைந்தான். பிரம்மன் விஷ்ணுவிடம் நடந்தவற்றை கூறினான். விஷ்ணுவும் ஒரு பெரிய மீன் வடிவம் ஏற்றான். கடலிலுள் சென்று சோமுகாசுரனைத் தேடிக் கடலையேக் கலக்கினான். பின்னர் ஒளிந்திருந்த சோமுகாசுரனை கண்டுபிடித்து அவனை கொன்றான். அவனிடமிருந்து பறிக்க வேதங்களை மீண்டும் பிரம்மனிடம் சேர்ப்பித்தான். ஆனாலும் சோமுகாசுரனின் உடலிருந்து வெளிவந்த இரத்தம் சமுத்திரத்தை செந்நிறமாகக்கியது மற்றும் அந்த மீன் இதை சாப்பிட்டது. அதன் காரணமாக அதான் பின் அந்த பெரிய மந்தார மலை போன்ற அந்த மீன் கடலை இடித்தபடி கொள்ளாமல் திசை நான்கிலும் பரவி நிரம்பியிருந்தான். அவன் அங்கிருக்கும் அனைத்து மீன்களையும் கொன்று தின்றான். ஒரு கடல் விலங்கினங்களையும் கூட விடாமல் அனைத்தையும் கொன்று தின்றான். இச்செய்தி தேவர்கள் மூலமாக சிவனை எட்டியது. சிவனும் தேவர்களுக்கு ஆறுதல் கூறி அக்கொடிய மீனை பிடிக்க மற்றும் கொல்ல வேண்டிய வேலையுடன் மீனவன் போல் உருமாறி அக்கடலில் அம்மீனிற்கு தக்கவாறு உருவம் கொண்டு நின்றான். வலைவீசி அப்பெரிய மீனைப் பிடித்தான். பின்னர் அதன் கண்னை தோண்டி தன் மோதிரத்தில் பதித்துக் கொண்டான் மற்றும் அந்த மீனை துண்டு துண்டாக வெட்டி கொன்றான். இதனால் கண்ணிழந்த மற்றும் கொல்லப்பட்ட அந்த மீன் வடிவம் கொண்ட விஷ்ணு சிவனிடம் தன் பழைய உருவைத் தருமாறுக் கேட்க, அவனும் தந்து ஆசி கூறினான். தேவர்களின் வேண்டுகோளின்படி அட்டூழியம் செய்த அந்த மீனை கொல்ல சிவன் எடுத்த உருவமே மச்ச சம்ஹார மூர்த்தியாகும் மற்றும் அவன் அந்த மீனைக் கொன்றான். இவனை காஞ்சிபுரத்துக் கைலாசநாதர் கோயிலில் தரிசிக்கலாம். அங்கு ஒரு கல் தூணில் இவ்வுருவம் செதுக்கப்பட்டுள்ளது. சொல்லிலக்கணம்தொகுவேறு பெயர்கள்தொகுதோற்றம்தொகுஉருவக் காரணம்தொகுசோமுகாசுரன் என்ற அரக்கன் மூன்று உலகத்தவராலும் யாவராலையும் அழிக்க முடியாத வரத்தினை சிவனிடமிருந்து பெற்றான். அந்த வரத்தினால் கர்வம் கொண்டு பிரம்மனிடமிருந்து வேதங்களை கைப்பற்றி கடலினுள் மறைந்தான். இதனையறிந்த விஷ்ணு மீனாக அவதாரமெடுத்து சோமுகாசுரனை வதம் செய்தான். ஆனால் மீனாகவே இருந்து கடலில் இருக்கும் மீன்களையும், விலங்குகளையும் கொன்று தின்றான். இதனையறிந்த சிவன் மீனவனாக உருமாற்றம் அடைந்து, கடலில் வலைவீசி அந்த மீனை பிடித்தான். அதன் கண்களை தோண்டியெடுத்தார் மேலும் அந்த மீனை துண்டு துண்டாக வெட்டி கொன்றான். அதன்பின் மீனாக இருந்த விஷ்ணுவுக்கு தன்னிலை தெரிந்தது. மீனாக இருந்த விஷ்ணுவை வதம் செய்த திருவுருவக் கோலம் மச்ச சம்ஹார மூர்த்தி என்று வழங்கப்படுகிறது. கோயில்கள்தொகுமேலும் காண்கதொகு |