மஜ்ஹருல் உலூம் கல்லூரி
மஜ்ஹருல் உலூம் கல்லூரி (Mazharul Uloom College) என்பது தமிழ்நாடு, திருப்பத்தூர் மாவட்டத்தில், ஆம்பூர் நகரத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரியானது ஆம்பூர் முசுலிம் கல்விச் சங்கத்தால் 1969ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, நிர்வகிக்கப்படுகிறது. கல்லூரியில் பொருளாதாரம், அறிவியல் ஆகியத் துறைகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. இக்கல்லூரி, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்வி நிறுவனமாகும்.
உருவாக்கம் | 1969 |
---|---|
அமைவிடம் | , , |
இணையதளம் | [1] |