மஞ்சள் அழகி

பூச்சி இனம்
மஞ்சள் அழகி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
லெப்பிடாப்பிடிரா
குடும்பம்:
பேரினம்:
டேலியசு
இனம்:
டே. யூசாரிசு
இருசொற் பெயரீடு
டேலியசு யூசாரிசு
(ட்ரூரீ, 1773)

மஞ்சள் அழகி அல்லது ஜெசபெல் (Common Jezebel, [Delias eucharis]) என்பது மத்திய அளவு வெள்ளையன்கள் (பீரிடே) வகை பட்டாம்பூச்சி ஆகும். இவ்வகை தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்காசியா ஆசியாவில் குறிப்பாக, இந்தியா, இலங்கை, மியான்மர், தாய்லாந்து ஆகிய இடங்களில் காணப்படும்.[1] இது டேலியஸ் குடும்பத்தில் காணப்படும் ஓர் பொதுவான பட்டாம்பூச்சி.

மரங்கள் அடர்ந்த காடுகளிலும், சமவெளிகளிலும் சாதாரணமாக காணப்படும் இவ்வண்ணத்துப்பூச்சிகள் சுமார் 7000 அடி உயரத்தில் உள்ள பகுதிகளில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவை பொதுவாக தோட்டங்களிலும், திறந்த வெளி காடுகளிலும், இரை தேடி மரங்கள் இடையே பறப்பதை காணலாம். அதன் இறக்கைகளில் மேல் புறம் கருப்பு இலைகளில் வெள்ளை மலர் சிறுதூவிகள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டது போல் காணப்படும். அடிப்புறம் மஞ்சள் மலரில், சிவப்பு சிறுதூவிகள் ஓரங்களில் அடுக்கப்பட்டிருக்கும். ஜெசபெல் வண்ணத்துப்பூச்சிகள் உயரமாக பறந்து திரியும், மலர்களில் தேன் குடிக்க மட்டும் தாழ்வாகப் பறக்கும்.

குறிப்புகள்

தொகு
  1. Bingham, C. T. (1907) The Fauna of British India, Including Ceylon and Burma. Butterflies. Vol 2
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சள்_அழகி&oldid=3958036" இலிருந்து மீள்விக்கப்பட்டது