மஞ்சள் திருமுழுக்கு

மஞ்சள் திருமுழுக்கு அல்லது மஞ்சள் அபிஷேகம் என்று அழைக்கப்படும் இச்செயல், இந்து சமயத்தில் கடவ
இந்தக் கட்டுரை மஞ்சள் திருமுழுக்கு பற்றியது. பிற மஞ்சள் நீராட்டு பயன்பாட்டுக்கு, மஞ்சள் நீராட்டு என்பதைப் பார்க்கவும்.

மஞ்சள் திருமுழுக்கு அல்லது மஞ்சள் அபிஷேகம் என்று அழைக்கப்படும் இச்செயல், இந்து சமயத்தில் கடவுளின் உருவச்சிலை அல்லது கடவுள் சார்ந்த் பொருட்களின் மீது மஞ்சள் நீர் ஊற்றி திருமுழுக்கு (அபிஷேகம்) செய்வதைக் குறிக்கிறது.[1][2] இச்செயல் பக்தியின் வெளிப்பாடாகக் கருதப்படுகிறது. கடவுள் உருவச்சிலை அல்லது பொருட்களின் மீது குடம் குடமாய் (அதிக அளவில்) மஞ்சள் நீர் ஊற்றி வழிபாடு நடைபெறும்.

மஞ்சள் மட்டுமின்றி, திருநீறு, சந்தனம், பால், இளநீர் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டும் இத்திருமுழுக்கு செய்யப்படுகிறது. பொதுவாக அலங்காரம் செய்யும் முன்பு இவ்வகையான திருமுழுக்கு நடைபெற்றாலும், குடமுழுக்கின் போது இது சிறப்பாகக் கருதப்படுகிறது.

உசாத்துணை

தொகு
  1. "உடன்குடி அம்மன் கோயிலில்: இன்று மஞ்சள் நீராட்டு விழா". பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 17, 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "அலகுமலை முருகன் கோவில் மஞ்சள் நீராட்டு விழா". பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 17, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சள்_திருமுழுக்கு&oldid=3223458" இலிருந்து மீள்விக்கப்பட்டது