மஞ்சள் தேமல் நோய்
மஞ்சள் தேமல் நோய் (Yellow mosaic disease) உளுந்து, பச்சைப்பயறு, துவரை, வெண்டை மற்றும் சோயா மொச்சை போன்றவற்றை தாக்கும் நச்சுயிரி (yellow mosaic virus) நோயாகும். பொதுவாக சூன், சூலை மாதங்களில் இந்நோய் அதிகமாக காணப்படும்[1]. மரவள்ளியில் தோன்றும் தேமல் நோய் ஜெமினி வைரசு எனப்படும் ஒரு வகை நச்சுயிரியால் உண்டாகிறது[2].
அறிகுறிகள்
தொகுமஞ்சள் தேமல் நோய் தாக்குதலுக்கு உட்பட்ட பயிரின் இளம் இலைப்பரப்பில் முதலில் சிறிய புள்ளிகள் தோன்றி, படிப்படியாக இலை முழுவதும் பரவி ஒளிரும் மஞ்சள் நிறத்தில் ஆங்காங்கே பச்சைப் புள்ளிகளுடன் மஞ்சள் நிற தேமல் படலங்களாக மாறிவிடும். இந்த நோய் தாக்குதல் அதிகமாகும் பொழுது இலைகள் வடிவமிழந்து குறுகி, சிறுத்து சுருங்கி, உருமாறி தோற்றமளிக்கும். இந்த நோயின் பாதிப்புக்குட்பட்ட பயிர் முதிர்ச்சியடைய காலதாமதமாகும். மேலும் குறைந்த அளவே பூக்கள் மற்றும் காய்களைக் கொண்டிருக்கும். காய்கள் சிறிய அளவிலும் உருமாறியும் காணப்படும். மஞ்சள் தேமல் நோயானது பூக்கும் முன் செடிகளைத் தாக்கும்பொழுது, இவை காய் பிடிக்காமலேயே இறந்துவிடும் வாய்ப்புள்ளது[3].
நோய் பரவும் முறைகள்
தொகுஇந்த கொடிய நச்சுயிரி நோய் ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிக்கு வெள்ளை ஈ மூலம் பரவுகின்றது. கோடைக்காலங்களில் வெள்ளை ஈக்கள் சுறுசுறுப்பாக இயங்குவதால் இந்நோய் தாக்கம் அதிகமாக தென்படும். நோய் கண்ட செடிகளின் இலைகளிலிருந்து வெள்ளை ஈக்கள் இலைச் சாற்றை உறிஞ்சும் போது நச்சுயிரியின் துணுக்கள் ஈக்களின் உறிஞ்சு குழலில் ஒட்டிக்கொண்டு, பின்பு அதே ஈக்கள் நோயற்ற ஆரோக்கியமான செடிகளுக்கு சென்று இலைச்சாற்றை உறிஞ்சும் போது அந்த செடிகளுக்கும் நோய் பரவுகிறது[2]. நோய் தடுப்பு முறைகளைக் கடைப்பிடிக்காவிட்டால், மிக விரைவாக அனைத்துச் செடிகளிலும் இந்த நோயானது பரவி அதிக மகசூல் இழப்பை ஏற்படுத்தும்.
நோய்க்கட்டுப்பாட்டு முறைகள்
தொகு- அதிகமான பாதிப்பு இருந்தால், ஏக்கருக்கு 200 மில்லி டைமெத்தோயேட்டு அல்லது மானோகுரோட்டோபாசு என்ற பூச்சிக்கொல்லியினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து நடவு செய்த 30[4]-45 நாட்களுக்குள் இலைவழித் தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்த முடியும்.
- இந்நோயைத் தடுக்க, வெண்டைச் செடிகளில் செயற்கை முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க மதுரை வேளாண் பல்கலைக்கழகக் கல்லூரியில் வேளாண் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர்[5].
- இமிடாகுளோர்பிரிட்டு 70 டபுள்யூஎஸ் என்ற மருந்தை கிலோவுக்கு 5 மிலி என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய பயன்படுத்த வேண்டும்[6].
- களை சார்பு பயிர்கள், இந்த வெள்ளை ஈக்கள் பெருக உதவி செய்கிறது. அதனால், களை கட்டுப்பாடு முக்கியம்[5].
- தாவர பூச்சிக்கொல்லி மருந்து, வேப்பெண்ணெய் 30 மில்லியை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து இலைகளில் தெளிக்க வேண்டும்.[5]
- நோய் எதிர்ப்பு சக்தி அல்லது நோய் தாங்கக் கூடிய ரகங்களைத் (உளுந்து ரகங்கள் வம்பன் - 4, வம்பன்-5, வம்பன்-6) தேர்வு செய்து பயிரிட வேண்டும்[6].
- பாதிக்கப்பட்ட செடிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உடனே பிடுங்கி அழிப்பதன்மூலம் இந்நோய் பரவாமல் சிறிதளவு தவிர்க்க முடியும்.
- மருந்துக்கரைசல் பயிரின் பாகங்களில் நன்கு பரவிப் படிவதற்காக வேளாண்மைக்கான திரவ சோப்புகளான சாண்டோவிட், இன்ட்ரான் போன்றவற்றுள் ஏதேனும் ஒன்றினை ஒரு லிட்டர் மருந்து கரைசலுக்கு கால் மில்லி வீதம் சேர்த்துக் கலக்கிக் கொள்ள வேண்டும். 10-15 நாட்கள் கழித்து மீண்டும் மருந்து தெளிக்க வேண்டும். கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க பயிரின் வளர்ச்சியினைப் பொறுத்து ஏக்கருக்கு 200 லிட்டர் வரை மருந்துக்கரைசல் தேவைப்படும்[3].
- வெள்ளை ஈக்கள் நடமாட்டத்தினை கட்டுப்படுத்த மஞ்சள் நிறம் பூசப்பட்ட டப்பாக்களில் கிரீசு அல்லது விளக்கெண்ணெய் தடவி (மஞ்சள் நிற ஒட்டுப் பொறி) ஏக்கருக்கு ஐந்து என்ற அளவில் பயிர் மட்டத்தில் குச்சிகளில் கவிழ்த்து வைக்க வேண்டும்.
- வைரசு கிருமிகளை பரப்பும் வெள்ளை ஈக்களை, தோட்டத்துக்குள் விடாமல் தடுக்க, தோட்டத்தைச் சுற்றி வரப்பு ஓர பயிர்களாக ஏழு வரிசையில் மக்காச்சோளம், சோளத்தைப் பயிரிடலாம்[6]. வெங்காயம், கொத்தமல்லி, மணத்தக்காளி போன்ற மணக்கும் ஊடுபயிர்களை நடலாம்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "உளுந்துப் பயிரில் மஞ்சள் தேமல் நோய் : கட்டுப்படுத்த யோசனை". தீக்கதிர். 13 சூலை 2015. http://theekkathir.in/2015/07/13/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D/. பார்த்த நாள்: 5 சூன் 2016.
- ↑ 2.0 2.1 "மரவள்ளி கிழங்கு பயிரில் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை வேளாண் அதிகாரி வழிகாட்டல்". தினகரன் (இந்தியா). 6 சூலை 2015. http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=468977&cat=504. பார்த்த நாள்: 5 சூன் 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 3.0 3.1 ந. முருகேசன் (11ஆகசுடு 2010). "கோடை உளுந்து சாகுபடியாளர்களின் கவனத்திற்கு...". தினமலர். http://www.www.dinamalar.in/supplementary_detail.asp?id=1275&ncat=7. பார்த்த நாள்: 5 சூன் 2016.
- ↑ இ. மணிகண்டன் (26 நவம்பர் 2014). "பயிர்களில் பரவும் நோய்கள்". தி இந்து (தமிழ்). http://tamil.thehindu.com/business/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6635705.ece. பார்த்த நாள்: 5 சூன் 2016.
- ↑ 5.0 5.1 5.2 5.3 "வெண்டைச் செடிகளில் பரவும் மொசைக் வைரஸ் நோய்: நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க விஞ்ஞானிகள் ஆராய்ச்சி". தமிழ்மித்ரன். http://www.tamilmithran.com/article-source/NjMyODk1/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%EF%BB%BF:-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%EF%BB%BF#.V1PYmiN95r0. பார்த்த நாள்: 5 சூன் 2016.
- ↑ 6.0 6.1 6.2 "உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய் தடுப்பு முறை". தினமணி. 19 மார்ச் 2015. http://www.dinamani.com/agriculture/2015/03/19/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B2/article2720163.ece. பார்த்த நாள்: 5 சூன் 2016.