வெள்ளை ஈ
புதைப்படிவ காலம்:Middle Jurassic–Recent
வெள்ளை ஈக்கள்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
கெமிப்பிடிரா
துணைவரிசை:
டெர்னோரைங்கா
பெருங்குடும்பம்:
அலியோரோடோயிடே
குடும்பம்:
அலியோரோடிடே
துணைக்குடும்பம்[1]

அலியோரோடிசினே
அலியோரோடினே
யுடோமோசெலினே

வெள்ளை ஈக்கள் (Whiteflies) சுருள் வளைய அறை இறக்கையினத்தைச் (Hemiptera) சேர்ந்த தாவர இலைகளின் அடிபகுதியை உணவாக உட்கொள்ளும் சிறிய பூச்சிகளாகும். வெள்ளை ஈக்களில் 1550க்கும் மேற்பட்ட சிற்றினங்கள் உள்ளன.

நோய் நுண்மப்பரப்பி

தொகு

மஞ்சள் தேமல் நோய் என்னும் கொடிய நச்சுயிரி நோய் ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிக்கு வெள்ளை ஈ மூலம் பரவுகின்றது. கோடைக்காலங்களில் வெள்ளை ஈக்கள் சுறுசுறுப்பாக இயங்குவதால் இந்நோய் தாக்கம் அதிகமாக தென்படும். நோய் கண்ட செடிகளின் இலைகளிலிருந்து வெள்ளை ஈக்கள் இலைச் சாற்றை உறிஞ்சும் போது நச்சுயிரியின் துணுக்கள் ஈக்களின் உறிஞ்சு குழலில் ஒட்டிக்கொண்டு, பின்பு அதே ஈக்கள் நோயற்ற ஆரோக்கியமான செடிகளுக்கு சென்று இலைச்சாற்றை உறிஞ்சும் போது அந்த செடிகளுக்கும் நோய் பரவுகிறது.[2] மேலும் வெள்ளை ஈக்கள் பருத்தி செடிகளின் இலைகளைத் தாக்கி, சாற்றை உறிஞ்சுவதால் பருத்தி இலைகள் தடிமனாக மாறுவதோடு நிறமிழந்து காணப்படுகின்றன.[3]

வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள்

தொகு
  • எலுமிச்சை செடிகளில் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த சுற்றியுள்ள பார்த்தீனிய செடிகளை அகற்ற வேண்டும்.[4]
  • செடிகளில் வெள்ளை ஈ தாக்குதல் ஆரம்ப கட்ட நிலையில் இருந்தால் வேம்பு எண்ணெயை தெளித்தால் போதுமானது.[4].
  • வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த, ஏக்கர் ஒன்றிற்க்கு 4 என்ற எண்ணிக்கையில் மஞ்சள் வண்ண ஒட்டுப் பொறிகளை வைத்து கட்டுப்படுத்தலாம். மேலும், சாறு உறிஞ்சும் பூச்சிகளின் அதிக தாக்குதலின் போது ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளான தயாமித்தாக்சிம் 4 கிராம் அல்லது பிப்ரோனில் 10 மில்லி அல்லது அசிபேட் 20 கிராம் அல்லது அசிடமாபிரைடு 10 கிராம் இவற்றில் ஏதாவது ஒன்றை 10 லிட்டர் தண்ணீருடன் 10 மில்லி ஒட்டும் திரவம் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.[3]

கரும்பு பயிரில் வெள்ளை ஈக்கள்

தொகு

கரும்பு பயிரில் வெள்ளை ஈக்கள் (அலிரோலோபசு பாரோடென்சிசு) தாக்குவதால் இலைகள் மஞ்சள் நிறமாகும். கரும்பு தோகைகள் இளஞ்சிவப்பு அல்லது கருஊதா/நாவல் நிறமாக மாறிப் பின் உலர்ந்து காய்ந்து போய்விடும். பாதிக்கப்பட்ட தோகைகளில் வெள்ளை மற்றும் கறுப்புப் புள்ளிகள் காணப்படும். தாக்குதல் அதிகரிக்கும் போது இலைகள் எரிந்ததுப்போல் தோற்றமளிக்கும். இதனால் கரும்பின் வளர்ச்சி தாமதமாகும்.[5]

பூச்சியின் விபரங்கள்

தொகு

கரும்பு தோகைகளின் அடிப்பகுதியில் இப்பூச்சிகள் முட்டைகள் இடுகின்றன. சிறிய வளைந்த காம்புடன் வெளிர் மஞ்சள் நிறமான முட்டைகள் இடப்பட்ட இரண்டு மணி நேரத்தில் பளபளக்கும் கருமைநிறமாக மாறிவிடும். முட்டைகள் நீள்வட்ட வடிவிலும், மெழுகினால் சூழப்பட்டும் காணப்படும். நான்காவது புழு நிலை கூட்டுப்புழுவாக தட்டையாக, சாம்பல் நிறத்தில் குஞ்சுகளை விட சற்று பெரிதாகத் தெரியும். முன் மார்பில் 'டி' வடிவில் வெள்ளை நிறக் கோடு காணப்படும். இக்கோடு புழு வண்டாக மாறும்போது மார்பினை இரண்டாகப் பிரிக்கும். முதிர்ந்த பூச்சிகளில் வெளிர் மஞ்சள் நிற உடலில் இறக்கைகள் மெழுகினால் சூழப்பட்டிருக்கும்.[5] இப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த, தோகைகளில் கூட்டுப்புழுக்கள் கூடுகட்டி இருப்பதால், தோகைகளை உரித்து உடனே எரித்து விடவேண்டும். இது வெள்ளை ஈக்களாக வெளி வருவதைத் தடுக்கும். போதிய அளவு நீர்ப்பாசனம் செய்வதால் மண்ணின் ஈரப்பதத்தை சீராக வைப்பதோடு இந்தநோய் அதிகரிக்காமல் தடுக்கலாம்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. Martin, J.H. & Mound, L.A. "An annotated check list of the world's whiteflies (Insecta: Hemiptera: Aleyrodidae)." Zootaxa 1492 (2007): 1–84.
  2. "மரவள்ளி கிழங்கு பயிரில் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை வேளாண் அதிகாரி வழிகாட்டல்". தினகரன் (இந்தியா). 6 சூலை 2015. http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=468977&cat=504. பார்த்த நாள்: 5 சூன் 2016. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. 3.0 3.1 "பருத்தியில் வெள்ளை ஈ, தத்துப் பூச்சிகளின் தாக்குதலை கட்டுப்படுத்த யோசனை". தினமணி. 9 சனவரி 2014. http://www.dinamani.com/edition_trichy/perambalur/2014/01/09/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%88-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA/article1990242.ece. பார்த்த நாள்: 5 சூன் 2016. 
  4. 4.0 4.1 "தோட்டக்கலைத்துறை ஆலோசனை எலுமிச்சை செடிகளில் வெள்ளை ஈ தாக்குதலை விரட்ட வழி". தினகரன் (இந்தியா). 19 ஏப்பிரல் 2016 இம் மூலத்தில் இருந்து 2018-06-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180610091727/http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=561283&cat=504. பார்த்த நாள்: 5 சூன் 2016. 
  5. 5.0 5.1 5.2 "பயிர் பாதுகாப்பு :: கரும்பு பயிரைத் தாக்கும் பூச்சிகள்". தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 5 சூன் 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளை_ஈ&oldid=3720314" இலிருந்து மீள்விக்கப்பட்டது