மஞ்சுஷா அருங்காட்சியகம்
மஞ்சுஷா அருங்காட்சியகம் (Manjusha Museum) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள புனித நகரமான தர்மஸ்தாலாவில் அமைந்துள்ளது. இங்கு பழம்பொருட்கள், ஓவியங்கள், கலைப்பொருட்கள், கோயில் ரதங்கள், விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார்களின் நல்ல தொகுப்புகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. [1] இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருள்கள் கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களில் இருந்து சேகரிக்கப்பட்டவை ஆகும். இந்த அருங்காட்சியகம் புகழ்பெற்ற மஞ்சுநாதர் கோயிலின் தெற்கே அமைந்துள்ளது.
Manjusha Museum | |
நிறுவப்பட்டது | 1989 |
---|---|
வகை | தனியார் அருங்காட்சியகம் |
மேற்பார்வையாளர் | கே. புஷ்பதத்தா |
உரிமையாளர் மற்றும் காப்பாட்சியர்
தொகுதர்மஸ்தாலாவின் தர்மதிகாரியான வீரேந்திர ஹெகடே என்பவர் இந்த பாரம்பரிய அருங்காட்சியகம் தனிப்பட்ட முறையில் சொந்தமாக உள்ளது. மேலும், அவர் இங்கு 35 ஆண்டுகளுக்கும் மேலாக சேகரித்த கலைப் பொருள்களை சேகரித்து வைத்துள்ளார்.மைசூரைச் சேர்ந்த புகழ்பெற்ற கலைஞரும், நாட்டுப்புறவியலாளருமான பி.ஆர்.திப்பேஸ்வாமி இந்த அருங்காட்சியகத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கினை வகித்தார். மறைந்த திப்பேசாமியின் சில ஓவியங்கள் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு நபர்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் இந்த அருங்காட்சியகம் நிறுவப்பட்டது.
சேகரிப்புகள்
தொகுஇந்த அருங்காட்சியகம் மௌரியர் காலத்திலிருந்து, கி.மு. 1ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சுடுமண் நாணயங்கள், மஞ்சுநாதா கோயிலின் கணக்கு விவரங்களைக் கொண்ட ஒரு பண்டைய புத்தகம், வித்வான் வீணை சேஷண்ணாவின் 300 ஆண்டு கால பழைய வீணா உள்ளிட்டவற்றைப் பாதுகாத்து வருகிறது. மேலும் இது அதிக எண்ணிக்கையிலான இந்திய கற்கள், உலோக சிற்பம், ஓவியங்கள், நகைகள், வழிபாட்டு பொருட்கள் மற்றும் கடலோரப் பகுதியின் கைவினைஞர்களால் உருவாக்கப்பட்ட பயன்பாட்டுப் பொருட்கள் ஆகியவற்றின் பரந்த தொகுப்பினைக் கொண்டுள்ளது. மேலும் இங்கு பல்வேறு அளவைக் கொண்ட கேமராக்கள் உள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் 6000 பனை ஓலை கையெழுத்துப் பிரதிகளைக் கொண்ட தனித்துவத் தொகுப்பும் காணப்படுகிறது.
மஞ்சுனாதேஸ்வரர் கோயிலுக்கு தெற்கில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தில் கர்நாடகாவின் பல்வேறு கோயில்களிலிருந்து பெறப்பட்ட தேர்கள் மஞ்சுனாதேஸ்வரர் கோயிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ளன. [2]
மேற்கண்ட கலைப்பொருள்களைத் தவிர பேனாக்கள், கண்ணாடிகள், பொம்மைகள் போன்ற பொதுவான பொருட்களைக் கொண்ட அழகிய தொகுப்புகள் பால் ஆச்சரியப்படுவார். இந்த பொருட்களில் சில நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையானவையாக உள்ளன. ஹெகடேவின் புகைப்படம் எடுத்தல் ஆர்வம் அங்குள்ள சிறியது முதல் பெரியது வரையிலான தொகுப்பில் வெளிப்படுவதை உணரமுடியும். ஒரு தீவிர புகைப்படக்காரரான அவருடைய சேகரிப்பைக் காட்சியிடுவதன் மூலம் பல தசாப்தங்களாக புகைப்படத்தின் வளர்ச்சியைக் கண்டறிய முடியும். மஞ்சுஷாவில் உள்ள பரந்த தொகுப்பு பார்ப்பதற்கு காட்சிக்கு விருந்தாக அமைந்துள்ளது. இந்த தொகுப்பு கல்விக்கு சிறந்த ஆதாரமாக உள்ளது. உள்நாட்டுக் கப்பல்கள், சடங்கு பொருள்கள், பொம்மைகள் மற்றும் விளையாட்டுகள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள் போன்ற பொருட்களை நன்கு அறிந்த சில பார்வையாளர்கள் தங்கள் வசமுள்ள பழங்கால பொருட்களை மஞ்சுஷாவுக்கு நன்கொடையாக வழங்கவோ அல்லது அவற்றைக் கவனமாக பாதுகாத்து வைக்கவோ அறிவுறுத்தப்படுகின்றார்கள். ஹெகடே அத்தகைய பாரம்பரியப் பொருட்களின் மீதான ஆர்வத்தையும் அன்பையும் பார்வையாளர்களிடம் உண்டாக்கியுள்ளார். [3]
பார்வை நேரம்
தொகுமஞ்சுஷா அருங்காட்சியகம் தினமும் காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 9.00 மணி வரையிலும் பயணிகளுக்காக திறந்து விடப்பட்டிருக்கும். [2]
குறிப்புகள்
தொகு- ↑ "Give priority to protecting heritage". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 25 May 2015.
- ↑ 2.0 2.1 Native Planet
- ↑ PLACES TO VISIT