மஞ்சு பாசினி

இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை

மஞ்சு பாசினி (செப்டம்பர் 24, 1906 - 23 செப்டம்பர் 1996) இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர்.

வாழ்க்கைக் குறிப்பு தொகு

மஞ்சு பாசினி 1906 ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவரது தந்தை வழக்கறிஞர் நரசிம்ம அய்யர் ஆவார். சென்னை, தம்புச்செட்டி தெருவில் துர்காபாய் தேஷ்முக் தலைமையில் நடந்த அந்நிய துணி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டார். இராஜாஜி நடத்திய வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்திலும் பங்கேற்றார். 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார்.1940 ஆம் ஆண்டு இளம்பெண்களைக் கொண்டு, சேவாதனம் என்ற அமைப்பை உருவாக்கினார். இறை உணர்வு, தேசப்பற்று, சேவை என்ற மூன்று குறிக்கோளைக் கொண்டு இவ்வமைப்பு செயல்பட்டது.

1947 முதல் 1967 வரை இவர் காங்கிரஸ் மகளிர் பிரிவுக்கு தலைமை ஏற்றார். பாரத சேவா சமாஜத்துக்கு தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

மறைவு தொகு

இவர் 23-9-1996 அன்று மறைந்தார்.

உசாத்துணை தொகு

  • பைம்பொழில் மீரான், தலைநிமிர்ந்த தமிழச்சிகள் -தோழமை வெளியீடு-2007
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சு_பாசினி&oldid=2717568" இலிருந்து மீள்விக்கப்பட்டது