மடகாசிரா கோட்டை
மடகாசிரா கோட்டை (Madakasira Fort) என்று அழைக்கப்படும் சிம்ககிரி கோட்டையானது, இந்தியாவில் ஆந்திரப் பிரதேசத்தில் ஸ்ரீசத்ய சாய் மாவட்டத்தின் மடகாசிரா நகரில் அமைந்துள்ளது. இது ஒரு மலைக்கோட்டை ஆகும். இந்திய அரசு இதைத் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக அறிவித்துள்ளது.[1]
மடகாசிரா கோட்டை | |
---|---|
மடகாசிரா, ஸ்ரீசத்ய சாய் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் இந்தியா | |
மடகாசிரா கோட்டை | |
ஆந்திரப் பிரதேசத்தில் கோட்டையின் அமைவிடம் | |
ஆள்கூறுகள் | 13°56′38″N 77°16′07″E / 13.94375°N 77.26853°E |
வகை | கோட்டை |
இடத் தகவல் | |
உரிமையாளர் | இந்திய அரசு |
இட வரலாறு | |
கட்டிய காலம் | 16ஆம் நூற்றாண்டு |
வரலாறு
தொகுமடகாசிராவின் கைபியாத்து எனப்படும் வரலாற்று ஆவணத்தின்படி, 1492ஆம் ஆண்டில், சிருடா இரங்கப்பா நாயகன் என்ற நபர் மதகாப்பள்ளி அல்லது மாண்டவியப்பள்ளி என்ற பழைய கிராமத்திற்கு அருகில் இன்றைய மடகாசிரா கிராமத்தை நிறுவினார். இவர் புதிய கிராமத்திற்கு மடக்கப்பள்ளி என்று பெயரிட்டு, உள்ளூர் மலையில் ஒரு சிறிய கோட்டையைக் கட்டினார். அருகிலுள்ள இரத்னகிரியில் தலைமையகத்தை நிறுவிய முஸ்லீம் தலைவர்களால் இவர் தோற்கடிக்கப்பட்டார்.[2]
17ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், கோட்டையை ஓர் உள்ளூர் தலைவர் இக்கோட்டையினை வைத்திருந்தார். இவர் விசயநகரப் பேரரசின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டார்.[3] மடக்கப்பள்ளி கிராமத்திற்கு அருகே இன்றைய மதகாசிரா வினை நிறுவிய குடும்ப உறுப்பினர்கள் சிராவின் தலைவர்களாக இருந்தனர். பிஜப்பூர் சுல்தானகம் சிராவைக் கைப்பற்றிய பிறகு, பிஜப்பூர் ஆட்சியாளர் மதக்கப்பள்ளியையும் அருகிலுள்ள இரத்னகிரி இந்த தலைவர்களிடம் வழங்கினார். பிஜப்பூர் ஆட்சியாளர்கள் மானியத்தைப் பல முறை ரத்து செய்து மீட்டெடுத்தனர்.[4]
1746ஆம் ஆண்டில், மராட்டிய சாகச வீரர் முராரி ராவ் கூட்டி கோட்டையில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். மேலும் மதகாசிர் உட்பட அருகிலுள்ள பல கோட்டைகள் மீது தனது மேலாதிக்கத்தைச் செலுத்தினார்.[5] மடகாசிராவின் தலைவர் இவரது துணை ஆளுகையாளர் ஆனார்.[4] 1762இல், மைசூரின் ஐதர் அலி, காலிகார்னாசசு ஆயர் டான் அன்டோனியோ டி நோரோன்ஹா தலைமையிலான போர்த்துகீசியத் துருப்புக்களின் ஆதரவுடன் 4 நாள் முற்றுகைக்குப் பிறகு கோட்டையைக் கைப்பற்றினார். ஐதர் அலியின் போர்த்துகீசிய அதிகாரிகளில் இருவர்-ஜோசு ரெய்சு மற்றும் பென்டோ டி காம்போசு-முற்றுகையின் போது இறந்தனர். சிறிது காலத்திற்குப் பிறகு நோரோன்கா கூட்டணியை விட்டு வெளியேறினார்.[6] முராரி ராவ் சிறிது காலத்திற்குப் பிறகு கோட்டையின் கட்டுப்பாட்டை மீட்டார். ஆனால் ஐதர் அலி விரைவில் மீண்டும் கைப்பற்றினார்.
1792இல் ஐதர் அலியின் மகன் திப்பு சுல்தான், சிறிரங்கபட்டம் உடன்படிக்கையின்படி இப்பகுதியை ஐதராபாத் நிசாமிடம் ஒப்படைத்தார். 1800ஆம் ஆண்டில், நிசாம் இதை ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்தார்.[5]
கட்டமைப்புகள்
தொகுஇந்தக் கோட்டையில் ஏழு வாயில்கள் உட்பட பல கட்டமைப்புகளும் குகைகளும் உள்ளன. முராரி ராவ் கோயில்கள் மற்றும் இந்துராயா கிணறு உட்படப் இந்த கட்டமைப்புகளில் பலவற்றைக் கட்டினார். நான்கு தூண்கள் மற்றும் ஒரு பெரிய மணியைக் கொண்ட சிங்கே-மூதி (சிங்கத்தின் முகம்) என்ற மலை உச்சி கட்டமைப்பையும் கட்டினார். இந்த மலை உச்சியில் இராணி மகால் என்ற அரண்மனை, குதிரை கொட்டகை, உடற்பயிற்சிக் கூடம் மற்றும் உணவு சேமிப்பு இடங்கள் உள்ளன.[7]
மலை உச்சிக்கு அருகில் இரண்டு குளங்களுடன் சிறி இராமலிங்கேசுவரர் கோவில் உள்ளது. கோட்டையின் தெற்கு வாயிலுக்கு அருகில் வெங்கடேசுவரா கோயில் உள்ளது. ஐதர் அலியின் படையெடுப்பின் போது அது முழுமையடையாமல் இருந்தது. கருடா கோயில் 1990களில் புனிதப்படுத்தப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Revenue from monuments in Andhra Pradedsh" (PDF). Ministry of Tourism, Government of India. 2021-12-16. பார்க்கப்பட்ட நாள் 2022-08-19.
- ↑ T.V. Mahalingam, ed. (1976). Mackenzie Manuscripts: Summaries of the Historical Manuscripts in the Mackenzie Collection. Vol. 2. University of Madras. pp. 316–317.
- ↑ Mark Wilks; Murray Hammick (1980). Historical Sketches of the South Indian History. Vol. 2. Cosmo.
- ↑ 4.0 4.1 Census of India, 1961: Anantapur district. Registrar General of India. 1964. p. cxii.
- ↑ 5.0 5.1 S. S. Jaya Rao, ed. (1986). "Census of India 1981: District Census Handbook - Anantapur" (PDF). Government of Andhra Pradesh. p. 3.S. S. Jaya Rao, ed. (1986). "Census of India 1981: District Census Handbook - Anantapur" (PDF). Government of Andhra Pradesh. p. 3.
- ↑ C.N. Wadia (1952). "Career of Bishop Noronha (1752-1762)". Journal of Indian History 30 (3): 283. https://archive.org/details/in.ernet.dli.2015.98845/page/n291/mode/1up.
- ↑ "Anantapur: 500 year old Madakasira fort cries for attention". https://www.deccanchronicle.com/nation/current-affairs/100319/anantapur-500-year-old-madakasira-fort-cries-for-attention.html.Nagabhushanam Hoskote (2019-03-10). "Anantapur: 500 year old Madakasira fort cries for attention". Deccan Chronicle. Retrieved 2022-08-19.