மடக்கு, இடைமடக்கு

இடைமடக்கு என்பது செய்யுளில் தொடை அமைக்கும் பாங்குகளில் ஒன்று,
மடக்கு என்பதன் வேறு வகை.
இது அணி வகையில் மடக்கணி எனப் பெயர் பெறும்.
யாப்பு வகையில் யமகம் என்னும் பாடல் நெறியோடு ஒப்புமை உடையது.
திரிபு என யாப்பு வகையாலும், திரிபணி என அணி வகையாலும் பெயர் பெற்ற மற்றொரு வகையும் உண்டு.

இந்த வகைப் பாடல்களைப் பாடிப் புலமை விளையாட்டு விளையாடிச் சில புலவர்கள் தம் சொல்வளத்தைப் புலப்படுத்துவர். இது 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர் பாணி.

இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் இடைமடக்குப் பாடல்களைப் பாடியுள்ளார். கானல்வரி என்பது நெய்தல் திணைக்கு உரிய இரங்கல் பாட்டு. கோவலன் யாழ் மீட்டிக்கொண்டு இதனைப் பாடுகிறான். பின்னர் மாதவியும் பாடுகிறாள்.[1]

மேலும் அடியில் ஒருபகுதி மட்டும் திரிந்து வரும் இடைமடக்குக் பாடல்களும் உண்டு.[2]

அடிக்குறிப்பு

தொகு
  1. பவள உலக்கை கையால் பற்றித்
    தவள முத்தம் குறுவாள் செங்கண்
    தவள முத்தம் குறுவாள் செங்கண்
    குவளை அல்ல கொடிய கொடிய
    இப்படி மூன்று பாடல்கள்
    சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்
    சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்
    ஊர்திரை நீர்வேலி உழக்கித் திரிவாள்பின்
    சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்
    இப்படி ஒரு பாட்டு
    இவை மூன்றும் கோவலன் பாடியவை
    இப்படிப்பட்ட பாடல்கள் மாதவி பாடிய வரிப்பாடலிலும் வருகின்றன.

  2. காட்டு

    பூவர் சோலை மயிலாலப் புரிந்து குயில்கள் இசை பாடக்
    காமர் மாலை அருகசைய நடந்தாய் வாழி காவேரி
    காமர் மாலை அருகசைய நடந்த வெல்லாம் நின்கணவன்
    நாம வேலின் திறங்கண்டே அறிந்தேன் வாழி காவேரி.
    மாதவி பாடிய வரிப்பாட்டு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மடக்கு,_இடைமடக்கு&oldid=1157699" இலிருந்து மீள்விக்கப்பட்டது