மடத்தருவி வழக்கு
மடத்தருவி வழக்கு (Madatharuvi case) 1966 ஆம் ஆண்டு இந்தியாவின் கேரளாவில் நடந்த மரியக்குட்டி என்ற விதவையின் கொலையைக் குறிக்கிறது. பெனடிக்ட் ஓணங்குளம் என்ற பாதிரியார் இந்தக் குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டார். அமர்வு நீதிமன்றம் பாதிரியாருக்கு மரண தண்டனை விதித்தது. ஆனால் அவர் சார்ந்த தேவாலயம் உயர் நீதிமன்றத்தை அணுகி இவரை விடுவித்தது. குற்றவாளியை பாதிரியாருக்குத் தெரியும் என்றும் ஆனால் பாதிரியார் பாவமன்னிப்பு கோரியவரை வெளிச்சத்துக்கு கொண்டுவர மறுக்கிறார் என்றும் பாதிரியாரின் ஆதரவாளர்கள் அப்போது கருத்து கூறினர்.
குற்றச்சாட்டு
தொகுகேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள இரான்னி நகரத்துக்கு அருகில் ஓடும் மடத்தருவி ஓடையில் மரியக்குட்டி என்ற விதவையை கொன்றதாக சீரோ மலபார் கத்தோலிக்க பாதிரியார் அருட்தந்தை பெனடிக்ட் ஓணங்குளம் மீது வழக்குத் தொடரப்பட்டது. ஓணங்குளத்திற்கு அமர்வு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இருப்பினும், கேரள உயர் நீதிமன்றம் 1967 ஆம் ஆண்டு சூழ்நிலை ஆதாரங்களை நிராகரிக்கும் தொழில்நுட்ப காரணங்களின் அடிப்படையில் பாதிரியாரை விடுவித்து விடுதலை செய்தது.
மடத்தருவி வழக்கு கேரளாவில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. பல திரைப்படங்களுக்கும் உத்வேகம் அளித்தது.[1] 2010 ஆம் ஆண்டு, அதிரம்புழா நகரத்தில் பெனிடிக்ட் ஓணங்குளத்தின் கல்லறையை சங்கனாச்சேரி பேராயர் பிரார்த்தனைக்காக திறந்து வைத்தபோது, உள்ளூர் ஊடகங்களில் இவ்வழக்கு மீண்டும் முக்கியத்துவம் பெற்றது.[2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Philip, A.J. "Mariakutty's murder". The Herald of India. பார்க்கப்பட்ட நாள் 2010-08-09.
- ↑ "Sainthood to Fr. Benedict". Manoramanews. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2022-02-15.
- ↑ "The road to sainthood". News in The week.