மடிசார்
மடிசார் (Madisar) அல்லது கோஷவம் என்பது தமிழ் பிராமணப் பெண்கள் புடவை அணியும் முறையாகும். இத்தகைய புடவை கட்டும் முறை பண்டைய இந்தியாவைச் சேர்ந்தது, கிமு 2 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 1 ஆம் நூற்றாண்டு வரை அந்தரியா மற்றும் உத்தரிய ஆடைகள் ஒன்றிணைத்து ஒரே ஆடையாக உருவாக்கபட்டது. புடவை கட்டும் இந்த பாணி "கோஷவம்" எனவும் அழைக்கபடும். தமிழ் பிராமணப் பெண்கள் திருமணத்திற்குப் பிறகு இந்த பாணியைப் பயன்படுத்த வேண்டும் . வெவ்வேறு சமூகங்கள் அசல் கோஷவம் பாணியிலிருந்து வெவ்வேறு புடவை பாணிகளை உருவாக்கியுள்ளன, அதற்கு அதிக பொருள் தேவைப்படுகிறது - ஒன்பது கெஜம். தற்போதுள்ள ஒன்பது கெஜ புடவை பாணிகளில் மகாராஷ்டிராவின் நவ்வரி, கன்னட திரை, தெலுங்கு பிராமண பாணி ஆகியவை அடங்கும். மடிசாரி என்ற பெயர் பொதுவாக தமிழ் பிராமணர்களுடன் தொடர்புடையது, இது ஐயர் கட்டு மற்றும் ஐயங்கார் கட்டு என இரண்டு முறைகள் உண்டு. இன்று, மடிசர் தினசரி உடையாக அரிதாகவே அணியப்படுகிறது, இருப்பினும் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பண்டிகை சந்தர்ப்பங்களில் மட்டும் மடிசர் பாணியை அணிகிறார்கள். [1] மடிசார் அணிவதற்கு ஒன்பது கெஜ புடவை தேவைப்படுகிறது, தற்போதைய நவீன புடவை அணியும் உடைக்கு 6 கெஜம் தேவை. ஐயர் மற்றும் ஐயங்கார் பிராமணர்கள் திருமண விழா, சீமந்தம் (முதல் கர்ப்பத்திற்காக நடத்தப்படும் ஒரு மத சடங்கு), அனைத்து மத சடங்குகள், பூஜை மற்றும் இறப்பு விழாக்கள் போன்ற சடங்கு / மத நிகழ்வுகளில் பெண்கள் மடிசார் அணிகிறார்கள். [2]
ஐயர்களும் ஐயங்கார்களும் வெவ்வேறு விதமாக மடிசார் அணிவார்கள். ஐயர்கள் வலது தோளில் பல்லு (ஒருவரின் தோளில் வரும் புடவையின் அடுக்கு) ஐயங்கார் இடது தோளில் அணிவார்கள். வழக்கமாக, ஒரு பெண் அணியும் முதல் மடிசர் மெரூன் அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும், இப்போதெல்லாம் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப மற்ற வண்ணங்களில் மடிசர் அணியப்படுகிறது.
மடிசார்கள் பட்டு, பருத்தி, பருத்தி-பட்டு கலவைகள், பாலியஸ்டர் -பருத்தி கலவைகள் போன்ற பல்வேறு பொருட்களில் கிடைக்கின்றன. இந்த நாட்களில் மடிசரின் பதிப்பும் 6-கஜ புடவையைப் பயன்படுத்தி கட்டப்படுகிறது. பாரம்பரியமாக இல்லாவிட்டாலும், அணிவதற்கு எளிதாகவும் வசதியாகவும் இருக்கிறது.
குறிப்புகள்
தொகு- ↑ Usha Raman. "The Whole Nine Yards".
- ↑ "Madisar Pudavai". Tamilnadu.com. 5 February 2013.