மடிப்பு நோக்கி

மடிப்புநோக்கி (Foldscope) என்பது ஒரு காணியல் நுண்ணோக்கி ஆகும். இது காகிதத் தாள்கள், வில்லைகள் போன்ற எளிய பொருட்களால் ஆன பாகங்களைக்கொண்டு உருவாக்கப்படுவது ஆகும். இது மனுபிரகாஷ் என்பவரால் வடிவமைக்கப்பட்டு, மிகவும் மலிவான விலையில் (1 அமெரிக்க டொலருக்கு) உருவாக்கப்பட்ட நுண்ணோக்கி ஆகும். மனுபிரகாஷ் என்பவர் ஒரு அமெரிக்கவாழ் இந்திய அறிவியலாளர் ஆவார். அறிவியலை எளிமைப்படுத்தும், மலிவானதாக்கும் எளிய அறிவியல் (Frugal Science) என்னும் ஒரு இயக்கத்தின் ஒரு பகுதியான கண்டுபிடிப்பாக இது உள்ளது.[2].

மடிப்புநோக்கியைத் தொகுத்தல்[1]

வரலாறுதொகு

ஆண்டன்வான் லூவன்ஹூக் என்பவரால் (1632-1723) முதன்முதலாக எளிய கோள ஆடிகளைப் பயன்படுத்தி நுண்ணோக்கி உருவாக்கப்பட்டது. அவர் அந்நுண்ணோக்கியை பயன்படுத்து முதன் முதலாக ஓரணு உயிரினங்களை கண்டவராவார்[2].

மனுபிரகாஷ் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு மருத்துவ பல்கலைக்கழகத்தில் உயிரிப்பொறியியல்துறையில் துணைநிலை பேராசிரியராகப் பணியாற்றுகிறார். அவரது குழுவினரால் மடிப்புநோக்கி என்ற புதியவகை நுண்ணோக்கி உருவாக்கப்பட்டது.[3] பில்ரூமெலிண்டாகேட்ஸ் அறக்கட்டளை உட்பட பல்வேறு நிறுவனங்களால் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டது. பில் ரூமெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மட்டும் 2012ம் ஆண்டு 100000 உதவித்தொகை கொடுத்துள்ளது.

மனுபிரகாஷ் தாய்லாந்தில் ஒரு ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றும் போது அங்குள்ள பணியாளார்கள் பெரும்பான்மையானோர் ஆய்வக நுண்ணோக்கியை பயன்படுத்த தயங்கினர். ஏனெனில் அதன் விலை பணியாளார்களின் மாத சம்பளத்தை விட உயர்வானதாக இருந்ததாகும். அப்போதுதான் மனுபிரகாஷ் விலைமலிவான (அறிவியல் கருவிகளை) நுண்ணோக்கியை உருவாக்க முனைந்தார்.

ஒரு பார்வைதொகு

துளையிடப்பட்ட அட்டைக்கற்றை, கோளஆடிகள், ஒளிசிந்தும் இருமைவாய், ஒளிப்பரவலாக்கும் அமைப்பு, டுநுனு (மின்கலத்துடன்) ஆகியவற்றை ஒருங்கிணைத்து மடிப்புநோக்கி அமைக்கப்படுகிறது.[4] 8 கிராம் எடையுள்ள ஒரு மடிப்பு நோக்கி 140 மடங்கு முதல் 2000 மடங்கு வரை உருப்பெருக்குகிறது. ஒரு காந்தமும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ளதால் மடிப்புநோக்கியை அலைபேசி கருவியுடன் கூட ஒட்டவைத்துக்கொள்ள முடியும்.[2] மடிப்பு நோக்கியைக் கொண்டு எஸ்சொ;ஸியா மற்றும் லெய்ஷ்மேனியா (Leishmania donovani , Escherichia coli) போன்ற ஒட்டுண்ணிகளைக்கூடக் காண முடியும்.[5]

பயன்கள்தொகு

  • ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சிறுவர்கள் வாழையைப் பாதிக்கும் பூஞ்சைகளையும் ஆராயப்

பயன்படுத்துகின்றனர்.

  • ஆவினங்களின் சாணங்களில் உள்ள நுண்ணுயிர்களை அறிந்தக்கொள்ளப் பயன்படுகிறது.
  • இந்தியாவில் உயிரியல், வேதியியல், இயற்பியல் கற்பிக்கவும், ஆய்வகங்களில் இதனைப் பயன்படுத்தவும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
  • கானாவில் மருத்துவப் பரிசோதனைகளுக்கும் இது தற்போது பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்தொகு

மேலதிக வாசிப்புக்குதொகு

  • Stanford bioengineer develops a 50-cent paper microscope on Stanford Medicine [Scope Blog]
  • Stanford microscope inventor featured on TED Talk on Stanford Medicine [Scope Blog]
  • Foldscope: Origami-based paper microscope, James Cybulski, James Clements, Manu Prakash, 5 March 2014, Cornell University Library.

வெளியிணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Foldscopes
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மடிப்பு_நோக்கி&oldid=2750259" இருந்து மீள்விக்கப்பட்டது