மடு பிரதேச செயலாளர் பிரிவு

இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர் பிரிவு

மடு பிரதேச செயலாளர் பிரிவு இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். மன்னார் மாவட்டம் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே வன்னியில் இலங்கைத் தீவின் மேற்குக் கரையோரம் அமைந்துள்ளது. மடு பிரதேச செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 17 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. காக்கையன்குளம், விளாத்திக்குளம், மாளுவராயக்கட்டையடம்பன், பண்ணவெட்டுவான், தெக்கம், மடு, கல்மடு, பரசங்குளம், பெரியமுறிப்பு, மாதாகிராமம், பெரியபண்டிவிரிச்சான், இரணையிலுப்பைக்குளம், கீரிசுட்டான், பாலம்பிட்டி ஆகிய ஊர்கள் இப் பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் வடக்கில் முல்லைத்தீவு மாவட்டம் உள்ளது. மேற்கில் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவு, மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு, முசலி பிரதேச செயலாளர் பிரிவு என்பனவும்; தெற்கில் வவுனியா மாவட்டம், அநுராதபுரம் மாவட்டம் என்பனவும், கிழக்கில் வவுனியா மாவட்டமும் எல்லைகளாக உள்ளன.

இப்பிரிவு 553 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது[1].

குறிப்புக்கள்

தொகு
  1. புள்ளிவிபரத் தொகுப்பு 2007, தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு