மட்டக்களப்புக் கோட்டை
மட்டக்களப்புக் கோட்டை அல்லது மட்டக்களப்பு இடச்சுக் கோட்டை (ஒல்லாந்து கோட்டை) அல்லது மட்டக்களப்பு போர்த்துக்கீச கோட்டை என அழைக்கப்படும் கோட்டையானது 1628ஆம் ஆண்டு போர்த்துக்கேயரால் கட்டப்பட்டு, ஒல்லாந்துக்காரரால் 1638இல் கைப்பற்றப்பட்டது.[1] இலங்கையிலுள்ள அழகிய சிறிய ஒல்லாந்துக் கோட்டைகளில் இதுவும் ஒன்று. மட்டக்களப்பு தீவுகளில் ஒன்றான புளியத்தீவில் அமைந்துள்ள இது, இன்னும் பழுதடையாமல் காணப்படுகிறது.
மட்டக்களப்புக் கோட்டை | |
---|---|
பகுதி: மட்டக்களப்பு | |
மட்டக்களப்பு, இலங்கை | |
மட்டக்களப்பு போர்த்துக்கீச கோட்டையின் ஒருபக்கத் தோற்றம். கச்சேரி இங்கு அமைந்துள்ளது | |
ஆள்கூறுகள் | 7°42′43″N 81°42′09″E / 7.711901°N 81.702377°E |
வகை | பாதுகாப்பு கோட்டை |
இடத் தகவல் | |
கட்டுப்படுத்துவது | இலங்கை அரசாங்கம் |
மக்கள் அனுமதி |
ஆம் |
நிலைமை | நன்று |
இட வரலாறு | |
கட்டிய காலம் | 1628, 1638 |
பயன்பாட்டுக் காலம் |
1628 - |
கட்டியவர் | போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் |
கட்டிடப் பொருள் |
கருங்கல், பாறை |
காவற்படைத் தகவல் | |
தங்கியிருப்போர் | இலங்கை அரச நிர்வாகம் |
காலவரிசை
தொகுஐரோப்பியர் கால மட்டக்களப்புக் கோட்டையின் காலவரிசை.[2]
- 1622 – போர்த்துக்கேயரால் கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்டது
- 1628 – கட்டுமானம் நிறைவுற்றது
- 1638 – ஒல்லாந்தரால் கைப்பற்றப்பட்டது
- 1639 – ஒல்லாந்தரால் கோட்டை அழிக்கப்பட்டது
- 1665 – மீள் கட்டுமானம் ஆரம்பமாகியது
- 1682 – செப்பணிடப்பட்டது
- 1707 – முன் கொத்தளமும் மேற்பகுதியும் கட்டி முடிக்கப்பட்டது
- 1766 – கண்டிய அரசுக்கு விட்டுக்கொடுக்கப்பட்டது
- 1796 – பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது
படங்கள்
தொகு-
மட்டக்களப்பு போர்த்துக்கேய கோட்டை, 1672
-
மட்டக்களப்பு போர்த்துக்கேய கோட்டை நுழைவாயிலிலுள்ள பழைய பீரங்கிகளில் ஒன்று
-
மட்டக்களப்பு போர்த்துக்கேய கோட்டையிலுள்ள பீரங்கி. தூரத்தில் காவல் கோபுரம் தெரிகிறது
இவற்றையும் காண்க
தொகுஉசாத்துணை
தொகு- ↑ WMF Program
- ↑ "The "Dutch fort" - Batticaloa". Ministry of Public Administration & Home Affairs and District Secretariat, Batticaloa. Archived from the original on 27 நவம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 31 March 2015.