மட்டக்களப்பு வெளிச்சவீடு

இலங்கையின் கலங்கரை விளக்கம்

மட்டக்களப்பு வெளிச்சவீடு அல்லது மட்டக்களப்பு கலங்கரை விளக்கம் என்பது மட்டக்களப்பு பாலமீன்மடுவில் அமைந்துள்ள 1913 இல் கட்டப்பட்ட 28 மீட்டர் (91 அடி) உயரமுடைய வெளிச்சவீடு ஆகும்.[1] இது மட்டக்களப்பு நகரிலிருந்து 5 கி.மீ தூரத்தில் பார் வீதியில் அமைந்துள்ளது. இதன் மேலிருந்து பார்க்கும்போது மட்டக்களப்பு வாவி கடலில் கலக்கும் முகத்துவாரத்தையும் எலும்புத்தீவையும் மற்றும் கிழக்கில் இந்தியப் பெருங்கடல் ஊடான சூரிய உதயத்தையும் மேற்கில் சூரிய மறைவையும் பறவைப் பார்வையில் பார்க்க முடியும்.

மட்டக்களப்பு வெளிச்சவீடு
Batticaloa lighthouse.jpg
மட்டக்களப்பு வெளிச்சவீடு is located in இலங்கை
மட்டக்களப்பு வெளிச்சவீடு
மட்டக்களப்பு வெளிச்சவீடு
ஆள்கூற்று7°45′17″N 81°41′6″E / 7.75472°N 81.68500°E / 7.75472; 81.68500
கட்டப்பட்டது1913

உசாத்துணைதொகு

  1. "Batticaloa Lighthouse". February 13, 2013 அன்று பார்க்கப்பட்டது.