மணல்தொட்டி அறிவு

மணல் தொட்டி அறிவு அல்லது மணல் தொட்டி ஞானம் (Sandbox Wisdom) என்பது ஆளுமை கற்றுத்தரும் ஒரு புத்தகம். இதன் ஆசிரியர் டாம் அசாக்கர் (Tom Asacker) மேலாளுமை பற்றி மிகுந்த அறிவு கொண்டவர்.

மணல்தொட்டி அறிவு
Sandbox wisdom.gif
நூலாசிரியர்டாம் அசாக்கர்
உண்மையான தலைப்புsandbox wisdom
மொழிஆங்கிலம்
வகைஆளுமை
வெளியீட்டாளர்சிம்பிள் டுரூத்சு
வெளியிடப்பட்ட நாள்
2008

முக்கிய கதாபாத்திரங்கள்தொகு

பில் வெஸ்ட் (Bill West): ஒரு நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி
ஃபால்கன் (Falcon): ஓய்வு பெற்ற பணக்காரர்
ஆண்ணி (Annie): ஃபால்கனின் பேத்தி

கதைக்களம்தொகு

ஒரு நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக இருக்கும் பில் வெஸ்ட் தன் நிறுவனத்தில் பல சிக்கல்களை சந்தித்து வெற்றியின்றி தொடர மனம் தளர்கிறார். என்ன செய்வதென அறியாத நிலையில் தன் நண்பனிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பால் அவர் ஃபால்கன் என்பவரை சந்திக்கிறார். தனது மேலாண்மை மற்றும் வாணிகம் தழுவி பல பாடங்களை எதிர்பார்த்திருக்கும் பில்லுக்கோ அதிர்ச்சி என்னவென்றால் அவர் கற்றுக்கொள்ளப்போகிறது ஃபால்கனின் பேத்தியான பால்வாடி படிக்கும் சிறுமியிடமிருந்து. இவர்கள் இருவரும் ஆண்ணியை பள்ளியிலிருந்து அழைத்து, பக்கத்திலிருக்கும் விளையாட்டு மைதானத்திற்கு செல்ல கதை சூடு பிடிக்கிறது.
தொடர்ந்து பல நாட்கள் இவ்வறு மூவரும் நேரம் சேர்ந்து கழிக்க பில் தன்னிடம் பல மாற்றங்கள் உருவாவதும், தன் மேலாளுமை மாறி பல நன்மைகள் அடைவதை உணருகிறார். இவரிடம் உள்ள மாற்றங்கள் இவரின் நிறுவனமும் மாற உதவியாயிருக்க எப்படி வெற்றிப்பாதையில் செல்கிறார் என்பது மீதி கதை.

கையேட்டுக் குறிப்புகள்தொகு

பில், ஃபால்கன் மற்றும் ஆண்ணி சந்திப்பின் போது முக்கியமான பாடங்களை குறிப்பெடுக்கும் பில்லின் கையேட்டுக்குறிப்புக்கள் படிக்கும் வாசகர்களுக்கும் மிகவும் உதவியாக இருக்க டாம் அவற்றை தனிப்பக்கங்களில் வடிவமைத்துள்ளார்.

எளிமையான முறையில் ஆளுமை அறிவுதொகு

வாணிபத்தில் வெற்றி பெற பல உத்திகள் இப்புத்தகத்தில் புதைந்திருக்கின்றன. அவற்றில் சில இங்கே:

  • பிள்ளைகளை சந்திக்கும் போது எவ்வாறு அவர்களின் அளவிற்கு குனிந்து வரவேற்கிறோமோ, அது போல் வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப நடக்க வேண்டும்.
  • மறந்து போவது வாத்துக்கள் மட்டுமல்ல, மனிதர்களும் தான். எனவே சந்தையிலிருப்போர் தன் வாடிக்கையாளர்களோடு தொடர்ந்து தொடர்பை வைத்துக்கொள்ள வேண்டும்.
  • எது செய்தாலும் இன்புற்று செய்ய வேண்டும். வேலை வேறு இன்பம் வேறென காணக்கூடாது (பிள்ளைகள் பிடிக்காததை செய்யாமலிருத்தல் போல்)
  • வாடிக்கையாளர்களோ, சக தொழிலாளிகளோ பொருட்களைப்போல் நடத்தாமல் அவர்களோடு மனநிலையளவில் தொடர்புண்டானால் அது நிலைத்த வெற்றியை அளிக்கும்.
  • தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணல்தொட்டி_அறிவு&oldid=1780432" இருந்து மீள்விக்கப்பட்டது