மணிக்கிராமம் திருமேனியழகர் கோயில்
மணிக்கிராமம் திருமேனியழகர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]
அமைவிடம்
தொகுசீர்காழி-பூம்புகார் சாலையில், திருவெண்காட்டினை அடுத்து மணிக்கிராமம் உள்ளது.
இறைவன்,இறைவி
தொகுஇக்கோயிலில் உள்ள இறைவன் திருமேனியழகர் ஆவார். இறைவி சௌந்தரநாயகி ஆவார். [1]
பிற சன்னதிகள்
தொகுதிருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலட்சுமி, பைரவர், துர்க்கை, நவக்கிரகங்கள் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. [1]