மணிப்புரி

(மணிப்பூரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி மக்களால் ஆடும் நடனத்திற்கு மணிப்பூரி என்ற பெயர் கொடுக்கப்பட்டது. மணிப்பூர் பிரதேசத்தில் மிகப் பழமையான மகிழ்விக்கும் ஒரு ஆடல் ஆகும். கிருஷ்ணராதா, கோபிகையரால் நிகழ்த்தப்பட்டதென்று கருதி வரும் மற்றொரு ஆடல் "ராஸ்லீலா" ஆகும். இக்கலையை ஆடுபவர்கள் சலங்கை அணியமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மணிப்புரி நடனம்
ஆர்மீனியா நாடு வெளியிட்ட மணிப்புரி நடன அஞ்சல் தலை

ராசலீலை நடனங்கள் மணிப்புரி நடனத்தின் பட்டியலில் அடங்கும். நான்கு வகையான ராசலீலை நடனங்கள் பின்வருமாறு: வசந்த ராசலீலை, குஞ்ஜ ராசலீலை, மஹாராசலீலை மற்றும் நித்திய ராசலீலை ஆகியனவாகும்.

பாடும் முறையும், குரல்வள அபிவிருத்திப் பயிற்சி, வேறு நடனக் கலைக்கான இசையைப் போல் இல்லாமல் வேறு பட்டிருக்கும். பாடுபவரின் குரல் உச்ச சுருதியிலும் தெளிவாகவும் இருக்கும். பங்க், டோலக், டோல், கஞ்ஜூரி என்னும் நான்கு வகையான வாத்தியங்கள் இந்த நடனத்திற்கு பக்கவாத்தியங்களாக அமைகின்றன. தாள வகைகள் இந் நடனத்திற்கு உரித்ததாகும்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிப்புரி&oldid=3762356" இலிருந்து மீள்விக்கப்பட்டது