மணிவிழுந்தான் பழைய ஏரி
மணிவிழுந்தான் பழைய ஏரி என்பது தமிழ்நாட்டின், சேலம் மாவட்டத்தில் சேலம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் தலைவாசலுக்கு ஐந்து கிலோமீட்டர் முன்னாள் அமைந்துள்ள ஒரு ஏரி ஆகும். இந்த ஏரி சூழலியல் இயக்கங்களால் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
இங்கு உள்நாட்டு வலசை பறவைகள் உட்பட 145 பறவையினங்கள், 122 தாவர இனங்கள், 75 வண்ணத்துப் பூச்சி இனங்கள், 20 தட்டான் இனங்கள், 11 பாம்பு இனங்கள், உடும்பு, 10 தவளை இனங்கள், 10 பாலூட்டி இனங்கள், ஏழு எறும்பு இனங்கள், பூச்சி இனங்கள் பல என 400 இக்கும் மேற்பட்ட உயிரினங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஏரியில் உருவாக்கப்பட்டுள்ள மண் திட்டில் உலக அளவில் அழிவாய்ப்பு இனமாக வகைப்படுத்தபட்டுள்ள ஆற்று ஆலா இனப்பெருக்கம் செய்துள்ளது ஒரு சிறப்பாகும். அண்மையில் 40 ஆற்று ஆலாக்கள் இங்கு மாலையில் வந்திருந்து இரவில் தங்கி இருந்து காலையில் சென்றன.
மேலும் சாம்பல் கொக்கு, செந்நீலக் கொக்கு, சின்ன பச்சைக் கொக்கு உள்ளிட்ட 15 வகையான நீர்ப்பறவைகளும், 27 வகையான நிலவாழ் பறவைகளும் இங்கு இனப்பெருக்கம் செய்கின்றன.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "இயற்கைப் புகலிடங்களின் வரிசையில் சேருமா சேலம்?". Hindu Tamil Thisai. 2023-06-03. பார்க்கப்பட்ட நாள் 2023-06-26.