மண்டலக் கல்வி நிறுவனம், மைசூரு
மண்டலக் கல்வி நிறுவனம், மைசூரு (Regional Institute of Education, Mysore) என்பது மைசூரில் 1963ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1-ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்டது.[1] இது தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவின் கீழ் செயல்படுகிறது. இந்தியாவில் இதையும் தவிர்த்து நான்கு மண்டலக் கல்வி நிறுவனங்கள் உள்ளன. அவை கீழ்க்கண்ட இடங்களில் அமைந்துள்ளன.
- அஜ்மீர்
- போபால்
- ஷில்லாங்
- புவனேஸ்வர்
பணிகள்
தொகு- பள்ளிக் கல்வியின் தரமேம்பாட்டிற்கு உதவுதல்
- பணிமுன் பயிற்சி அளித்தல்
- பணியிடைப் பயிற்சி அளித்தல்
- ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல்
- ஆசிரியர் கல்வியினை மேம்படுத்துதல்
இந்நிறுவனம் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, லட்சத்தீவுகள் பகுதிகளுக்கென்று செயல்படுகிறது.
வழங்கப்படும் பணிமுன் பயிற்சிகள்
தொகு- கல்வியியல் இளைஞர் ( B.A.Ed) ஒருங்கிணைந்த படிப்பு
- கல்வியியல் நிறைஞர் (M.Ed)
- கல்வியியல் முனைவர் (Ph.D. Education)
- வழிகாட்டுதல் மற்றும் அறிவுரை பகர்தல் பட்டயப்படிப்பு
மேற்கோள்கள்
தொகு- ↑ "RIE Mysore - About". Regional Institute of Education, Mysore.