மண்பிரீத் கவுர்
மண்பிரீத் கவுர் (Manpreet Kaur) அரியானாவின் அம்பாலாவைச் சேர்ந்த இந்தியத் தொழில்முறை ஒலிம்பிக் குண்டு எறியும் போட்டியாளர் ஆவார்.
தனிநபர் தகவல் | |
---|---|
தேசியம் | இந்தியர் |
பிறப்பு | 6 சூலை 1990[1] |
விளையாட்டு | |
நாடு | இந்தியா |
விளையாட்டு | ஒலிம்பிக் குண்டு எறிதல் மெய்வல்லுநர் பாரம் தூக்குதல் |
நிகழ்வு(கள்) | தடகள விளையாட்டுக்கள் |
பயிற்றுவித்தது | கரம்சித் சிங் |
சாதனைகளும் விருதுகளும் | |
மண்டல இறுதி | இந்தியா |
தேசிய இறுதி |
|
11 சனவரி 2013 இற்றைப்படுத்தியது. |
சனவரி 10, 2013இல் இவர் தேசிய பாரம் தூக்குதல் போட்டிகளில் பெண்களுக்கான +75 கிலோ வகுப்பில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றார்; ஒட்டுமொத்தமாக 189 கிலோ எடையைத் தூக்கினார்.[2] குண்டு எறிதல் போட்டியிலும் இவரை தேசியச் சாதனை புரிந்துள்ளார்; 17.96மீ தொலைவிற்கு வீசியுள்ளார். இவர் 2016 இரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க நடந்த தகுதிச் சுற்றில் இச்சாதனையை நிகழ்த்தி தகுதி பெற்றார்.[3] ஆனால் ஆகத்து 12 அன்று நடந்த ஒலிம்பிக் போட்டியில் 17.06 மீ தொலைவிற்கே வீச முடிந்ததால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறவில்லை.
மேற்கோள்கள்
தொகு- ↑ https://www.iaaf.org/athletes/india/manpreet-kaur-228546
- ↑ "Maiden National title for Manpreet Kaur". The Hindu. 2013-01-11. http://www.thehindu.com/sport/other-sports/maiden-national-title-for-manpreet-kaur/article4295416.ece. பார்த்த நாள்: 2013-01-11.
- ↑ "Manpreet Kaur breaks record, qualifies for Rio". Times of India. Nilesh Bhattacharya. http://timesofindia.indiatimes.com/sports/more-sports/athletics/Manpreet-Kaur-breaks-record-qualifies-for-Rio/articleshow/48995905.cms. பார்த்த நாள்: 17 September 2015.