மண் சுமந்த படலம்

மண் சுமந்த படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் திருவிளையாடல் புராணம் நூலின் 63வது படலமாகும். இப்படலம் பரி நரியாக்கிய படலம் என்பதன் தொடர்ச்சியாக அமைந்துள்ளது.

சுருக்கம்

தொகு

வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து, அவ்வாறு பல கரைகளை உடைத்துக் கொண்டு பாய்ந்தது. வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த அரசன், ஊரில் இருக்கும் அனைவருக்கும் கரையை அடைக்கும் பணியை தந்தான். அதிகாரிகள் ஊரில் இருப்பவர்களுக்கு கரையின் அளவினை நிர்ணயம் செய்தார்கள்.

அந்த ஊரில் வந்தி எனும் மூதாட்டி வாழ்ந்து வந்தாள். அவர் பிட்டினை விற்று பிழைத்து வந்தார். வயது மூப்பின் காரணமாக கடுமையான கரையை அடைக்கும் பணியை செய்ய முடியவில்லை. அப்போது இறைவன் ஒரு சிறுவனாக வந்து தான் வந்திப் பாட்டிக்கு பதிலாக அடைப்பதாக ஒப்புக் கொண்டான். அதற்கு கூலியாக உடைந்த பிட்டினை தருவதாக வந்திப்பாட்டியும் ஒப்புக் கொண்டாள்.

சிறுவனாக வந்த இறைவன் மூதாட்டியிடம் பிட்டினை வாங்கி சாப்பிடுவதும், அது தீரும் வரை ஆடிப் பாடுவதுமாக இருந்தார். அதனால் வந்தி மூதாட்டிக்குறிய இடத்தில் மட்டும் கரை கட்டப்படாமல் இருந்தது. மேலதிகாரிகள் அதனை விசாரித்துக் கொண்டு இருக்கையில் அரசன் வந்தார். அவரிடம் மேலதிகாரிகள், கூலியைப் பெற்றுக் கொண்டு சிறுவன் வேலை செய்யவில்லை என புகார் செய்தனர்.

அரசன் சிறுவனை அடித்ததும், அந்த அடி எல்லா உயிர்கள் மேலும் பட்டது. இறைவன் ஒரு கூடையில் மட்டும் மண் சுமந்து கரையை அடைக்க, அனைத்து கரைகளும் அடைக்கப்பெற்று வைகை நதி வெள்ளம் கட்டுக்குள் வந்தது. இறைவன் மறைந்தார். வந்தி மூதாட்டியை சிவகணங்கள் வந்து அழைத்துச் சென்றன. [1]

காண்க

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=2168

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்_சுமந்த_படலம்&oldid=3223564" இலிருந்து மீள்விக்கப்பட்டது