மதுகர் தத்தாத்திரேய தேவ்ரஸ்

இந்திய அரசியல்வாதி
(மதுகர் தத்ரேய தேவ்ரஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மதுகர் தத்தாத்திரேய தேவ்ரஸ் (Madhukar Dattatraya Deoras) (11 டிசம்பர் 1915 - 17 சூன் 1996), பாலசாகிப் தேவ்ரஸ் என அன்பாக அழைக்கப்படுவார். ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் மூன்றாம் அகில இந்திய தலைவராவார்.

மதுகர் தத்தாத்திரேய தேவ்ரஸ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு11 டிசம்பர் 1915
நாக்பூர், பிரித்தானிய இந்தியா
இறப்பு17 சூன் 1996
நாக்பூர், இந்தியா
தேசியம்இந்தியன்

தத்தாத்திரேய கிருஷ்ணாராவ் தேவ்ரஸ் - பார்வதிபாய் இணையருக்கு நாக்பூரில் பிறந்த தேவ்ரஸ், 1935இல் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் வழக்கறிஞர் பட்டம் பெற்றவர். துவக்க காலமுதலே ஆர் எஸ் எஸ் பிரச்சாரகராக மேற்கு வங்காளத்தில் தொண்டு செய்தவர். 1965இல் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் பொதுச் செயலராக விளங்கியவர். கோல்வால்கரின் மறைவிற்குப் பின் ஆர் எஸ் எஸ் அமைப்பின் அகில இந்திய தலைவராக 1973 முதல் 1994 முடிய செயல்பட்டவர்.[1]

ஆதார நூற்பட்டியல்

தொகு

நூல்கள்

மேற்கோள்கள்

  1. Klostermaier, p. 446.

வெளி இணைப்புகள்

தொகு
முன்னர் தேசியத் தலைவர், ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்
1973–1993
பின்னர்