மதுக்கூர் அமிர்தகடேசுவரர் கோயில்

மதுக்கூர் அமிர்தகடேசுவரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம் தொகு

இக்கோயில் பட்டுக்கோட்டை-மன்னார்குடி சாலையில் பட்டுக்கோட்டைக்குக் வட கிழக்கே 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.[1]

இறைவன், இறைவி தொகு

இங்குள்ள இறைவன் அமிர்தகடேசுவரர் ஆவார். இறைவி மங்களாம்பிகை.பாற்கடலைக் கடைந்தபோது கிடைத்த அமிர்தம் சிவலிங்கமாக மாறியதால் மூலவர் அவ்வாறு அழைக்கப்படுகிறார். தேவர்களும், அசுரர்களும் கடலைக் கடைந்து கலசம் வெளிப்பட்டதும், இறைவி அதனைப் பங்கிடும் முறையைக் குறித்துத் தீர்மானிக்கும் முன்பாக நீராடச் சென்றுவிட்டதாகவும், அப்போது தரையில் வைத்த கலசமே லிங்கத் திருமேனியாக மாறியதாகக் கூறுவர்.[1]

சுதை சிற்பங்கள் தொகு

மகாமண்டபத்தில் தேவர்களும், அசுரர்களும் மந்தர மலையை, வாசுகியைக் கொண்டு கடைவதும், அமிர்தகடேசுவரர் எழுந்தருளுவதும் போன்ற சுதை வடிவிலான சிற்பங்கள் காணப்படுகின்றன. அவை தலபுராணத்தை எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளன.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014