மதுமதி பத்மநாதன்

தமிழ்த் திரைப்பட நடிகையும், தொலைக்காட்சித் தொகுப்பாளினியும் ஆவார்

மதுமதி பத்மநாதன் (Madhumathi Pathmanadan) தமிழ்த் திரைப்பட நடிகையும், தொலைக்காட்சித் தொகுப்பாளினியும் ஆவார்.

மதுமதி பத்மநாதன்
பிறப்புதிருகோணமலை, இலங்கை
தேசியம்இலங்கைத் தமிழர்
பணிதொலைக்காட்சித் தொகுப்பாளினி, திரைப்பட நடிகை, மாடல்
செயற்பாட்டுக்
காலம்
2019 - இன்று வரை
பெற்றோர்திருமலை பத்மநாதன்

வாழ்க்கைக் குறிப்பு தொகு

மதுமதி பத்மநாதன் இலங்கை, திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.[1] மதுமதியின் தந்தை திருமலை பத்மநாதன் ஒரு பிரபலமான ஈழத்து இசையமைப்பாளர் ஆவார்.[2] முறையாக பரதநாட்டியம் பயின்ற மதுமதி,[2] இலங்கையின் அரச ஊடகமான வசந்தம் தொலைக்காட்சியில் இவர் நம்ம ஹில்ஸ் என்ற நிகழ்ச்சியை ஓராண்டிற்கும் மேலாகத் தொகுத்து வழங்கியிருந்தார்.[1][2] இலங்கையில் குறும்படங்கள், மற்றும் விளம்பரப் படங்களில் இவர் நடித்திருக்கிறார். இயக்குநர் விக்ரம் சிறீதரின் இயக்கத்தில் ரெட்ரம் என்ற தமிழ்த் திரைப்படத்தில் இவர் முதன் முதலில் கதாநாயகியாக நடித்தார். அசோக் செல்வன் இதில் கதாநாயகனாக நடித்தார்.[1] இத்திரைப்படத்தின் தயாரிப்புப் பணிகள் முடிவடைந்த நிலையில், திரையிடப்படுவதற்காகக் காத்திருக்கிறது. இவர் நடித்து வெளிவந்த முதல் தமிழ்த் திரைப்படம் ஏலே. இது 2021 பெப்ரவரி 28 இல் விஜய் தொலைக்காட்சியில் முதன்முதலாகத் திரையிடப்பட்டது.[3] இத்திரைப்படம் பின்னர் 2021 மார்ச் 5 இல் நெற்ஃபிளிக்சு மூலம் உலகெங்கும் அறிமுகமானது. அலிதா சமீமின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மதுமதி கதாநாயகியாக நடித்திருந்தார். இத்திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.[4]

திரைப்படங்கள் தொகு

குறியீடு
  இன்னும் வெளியிடப்படாத படங்களை குறிப்பிடுகின்றன.
ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள்
2021 ஏலே நாச்சியா
ரெட்ரம் படப்பிடிப்பு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுமதி_பத்மநாதன்&oldid=3273659" இலிருந்து மீள்விக்கப்பட்டது