மதுரை புத்தகத் திருவிழா
மதுரை புத்தகத் திருவிழா என்பது தமிழ்நாட்டின் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினரால் மதுரை தமுக்கம் மைதானத்தில் 2006ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஓர் புத்தகக் கண்காட்சியாகும். இப்புத்தகக் கண்காட்சியில் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன், இந்தியாவின் முக்கிய பதிப்பகங்கள் சிலவும் கலந்து கொள்கின்றன. இப்புத்தகக் கண்காட்சி மதுரை புத்தகக் கண்காட்சி எனும் பெயரிலும் அழைக்கப்படுகிறது.
புத்தக அரங்குகள்
தொகுஇக்கண்காட்சியில் பதிப்பகங்கள் அல்லது விற்பனையாளர்களுக்குத் தனித்தனியாக கடைகள் அமைக்கப்படுகின்றன. இந்தக் கடைகளில் புத்தகங்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்படுகின்றன. பொதுவாக பத்து நாட்கள் நடத்தப்படும் இக்கண்காட்சி காலை 11 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை செயல்படுகிறது.
கருத்தரங்கம்
தொகுஇக்கண்காட்சியில் மாலை 5. 30 மணி முதல் சிறப்பு எழுத்தாளர்கள் பங்கேற்கும் சொற்பொழிவுகள் மற்றும் பல்வேறு தலைப்புகளில் இலக்கிய நிகழ்ச்சிகள், விசாரணை அரங்கம், சுழலும் சொல்லரங்கம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் போன்றவையும் இடம் பெறுகின்றன.
புத்தகத் திருவிழாக்கள்
தொகு- 2015 ஆம் ஆண்டில் 10ஆவது மதுரை புத்தகத் திருவிழா - ஆகஸ்டு 28 முதல் செப்டம்பர் 7 வரை பத்து நாட்கள் நடைபெற்றது.[1][2]