மதுரை வாலைசாமி ஞானக் கும்மி
மதுரை வாலைசாமி ஞானக் கும்மி என்பது வாலைசாமி என்னும் சித்தரால் பாடப்பட்டது. இதில் 185 பாடல்கள் உள்ளன. எல்லாப் பாடல்களும் இரண்டு அடிகள் கொண்ட கண்ணி யாப்பினால் ஆன பால்கள். [1] இவற்றில் 4 பாடல்கள் காப்புப் பாடல்கள். சிவபாலன் கணபதி, சிவசுப்பிரமணியன், செந்தில் வேலவன், முக்கோண விநாயகன் ஆகிய தெய்வங்கள் முன்னின்று இந்த நூலைக் காக்க வேண்டும் என்று வேண்டுகின்றன. பிற பாடல்கள் சிறுமியர் கும்மி அடித்து விளையாடும்போது பாடும் பாடல்களாக உள்ளன. பாடல்கள் "ஞானப்பெண்ணே" என விளித்துப் பாடும் பாடல்களாக உள்ளன.
எடுத்துக்காட்டு
தொகுபூட்டைத் திறப்பதும் கையாலே – மனப்
- பூட்டைத் திறப்பதும் மெய்யாலே
வீட்டைத் திறக்க முடியாமல் – விட்ட
- வீதி இதென்கிறார் ஞானப் பெண்ணே [2]
குடியிருக்கும் வீட்டுப் பூட்டைக் கையால் திறக்கிறோம். அதுபோல மனம் என்னும் பூட்டை நம் உடம்பாகிய மெய்யால், உண்மை உணர்வால் திறக்க வேண்டும். மனத்தைத் திறந்து வீடுபேறு அடைய வேண்டும். மனவீட்டைத் திறக்க முடியாமல் மக்கள் "இது இறைவன் விட்ட விதிவழி" என்று சொல்லிச் சும்மா இருந்துவிடுகின்றனர்.
ஞானம்
தொகுகாரியக் காரரோ அஞ்சு பேராம் – அவர்
- காரியம் பார்க்க வீரஞ்சு பேராம்
மாரீசக் காரர் சமாதிக்கண் – மூன்றுபேர்
- வார்த்தையைக் கேளடி ஞானப் பெண்ணே [3]
காரியக்காரர் 5 பேர் - சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் - ஐம்புலன்
காரியம் பார்க்கும் வீரர் 5 பேர் - மெய், வாய், கண், மூக்கு, செவி - ஐம்புலன்
சீதையை மயக்கிய மாரீச மான் போன்றவர் 3 பேர் - காமம், வெகுளி, மயக்கம்
ஞானப் பெண்ணே
இவற்றைக் கேட்டுத் தெரிந்துகொள்
மேற்கோள்
தொகு- ↑ சித்தர் பாடல்கள் பக்கம் 257 முதல்
- ↑ பாடல் 43
- ↑ பாடல் 23