சித்தர் பாடல்கள்


இசை வடிவங்கள்
தமிழிசை
நாட்டுப்புற இசை
கருநாடக இசை
மெல்லிசை
திரையிசை
தமிழ் ராப் இசை (சொல்லிசை)
தமிழ் பாப் இசை
துள்ளிசை
தமிழ் ராக் இசை
தமிழ் இயைபிசை (fusion)
தமிழ் கலப்பிசை (Remix)
பாடல் வகைகள்
நாட்டார் பாடல்கள்
கானா பாடல்கள்
சித்தர் பாடல்கள்
ஈழப்போராட்ட பாடல்கள்
கிறித்துவப் பாடல்கள்
பக்திப் பாடல்கள்
இசுலாமியப் பாடல்கள்
பன்மொழிப் பாடல்கள்
[[]]
[[]]

தொகு

சித்தர்களால் இயற்றப்பெற்ற பாடல்கள் சித்தர் பாடல்கள் ஆகும். இவற்றைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

 • வேதியியல், மருத்துவம், வானியல் போன்ற துறைசார் தகவல்கள் அடங்கிய பாடல்கள்.
 • சமூக சீர்சிருத்த கருத்துக்கள் தாங்கிய பாடல்கள்.
 • ஆன்மீகப் பாடல்கள்.

எடுத்துக்காட்டுகள் தொகு

அழுகணிச் சித்தர் பாடல்கள் தொகு

முதன்மைக் கட்டுரை: அழுகணிச் சித்தர் பாடல்

கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி யென்வயிறு
நில்லென்று சொன்னால் நிலைநிறுத்தக் கூடுதில்லை
நில்லென்று சொல்லியல்லோ நிலைநிறுத்த வல்லார்க்குக்
கொல்லென்று வந்தநமன் என் கண்ணம்மா!
குடியோடிப் போகானோ! 7

ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
மாற்றிப் பிறக்க மருந்தெனக்கு கிட்டுமென்றால்
ஊற்றைச் சடலம் விட்டேஎன் கண்ணம்மா!
உன்பாதஞ் சேரேனோ! 8

கடுவெளிச் சித்தர் - ஆனந்தக் களிப்பு [1] பரணிடப்பட்டது 2007-11-24 at the வந்தவழி இயந்திரம் தொகு

முதன்மைக் கட்டுரை: கடுவெளிச் சித்தர் பாடல்கள்

நந்த வனத்திலோ ராண்டி - அவன்

நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக்

கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி.

குதம்பைச் சித்தர் பாடல்கள் [2] பரணிடப்பட்டது 2007-11-24 at the வந்தவழி இயந்திரம் தொகு

முதன்மைக் கட்டுரை: குதம்பைச் சித்தர் பாடல்கள்

காலனை வென்ற கருத்தறி வாளர்க்குக்
 கோலங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
 கோலங்கள் ஏதுக்கடி ? 26

வெண்காயம் உண்டு மிளகுண்டு சுக்குண்டு
 உண்காயம் ஏதுக்கடி - குதம்பாய்
 உண்காயம் ஏதுக்கடி ? 27

மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்போர்க்குத்
 தேங்காய்ப்பால் ஏதுக்கடி - குதம்பாய் 
 தேங்காய்ப்பால் ஏதுக்கடி ? 28

பட்டணஞ் சுற்றிப் பகலே திரிவோர்க்கு
 முட்டாக்கு ஏதுக்கடி - குதம்பாய்
 முட்டாக்கு ஏதுக்கடி ? 29

தாவாரமில்லை தனக்கொரு வீடில்லை
 தேவாரம் ஏதுக்கடி - குதம்பாய்
 தேவாரம் ஏதுக்கடி ? 30

தன்னை அறிந்து தலைவனைச் சேர்ந்தோர்க்குப்
 பின்னாசை ஏதுக்கடி - குதம்பாய்
 பின்னாசை ஏதுக்கடி ? 31

பத்தாவுந் தானும் பதியோடு இருப்பார்க்கு
 உத்தாரம் ஏதுக்கடி - குதம்பாய்
 உத்தாரம் ஏதுக்கடி ? 32

இவற்றையும் பாக்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தர்_பாடல்கள்&oldid=3397803" இலிருந்து மீள்விக்கப்பட்டது