இடைக்காட்டுச் சித்தர் பாடல்
இடைக்காட்டுச் சித்தர் பாடல் இடைக்காட்டுச் சித்தர் என்பவரால் பாடப்பட்டது. காப்புச் செய்யுள் நீங்கலாக 130 பாடல்களை உடையது இப்பாடல் தொகுப்பு.
எளிமையான நடையுடையவை. உலகவியல்பினை, நிலையாமையை, உணர்ந்து இறைவன் அருளை நாடும் இன்றியமையாமையைப் பொதுவாக அடிப்படைக் கருத்தாக உடையன இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள். இவை நாட்டுப் பாங்கான இலக்கிய அமைதிகளைப் பின்பற்றுவது குறிப்பிடத்தக்கது. தாண்டவக்கோனே, கோனாரே, பசுவே, குயிலே என விளித்துப் பாடிய பாடல்கள் நாட்டுப்பாடல் மரபினைக் காட்டுகின்றன.[1]
இவரது பாடல் ஒன்று
தொகு- மனம் என்றும் மாடு அடங்கின்
- தாண்டவக் கோனே! முத்தி
- வாய்த்தனென்று எண்ணேடா
- தாண்டவக் கோனே!
மனம் என்பது கட்டுக் கடங்காத ஒரு முரட்டு மாடு, அது நமது கட்டுக்குள் அடங்குமானால் விடுதலை கிடைத்து வெற்றியும் அடையலாம் என்று கூறுகிறார்.[2]
வெளியீடுகள்
தொகு- பதினெண் சித்தர்கள் பெரிய ஞானக்கோவை (முருகேசநாயகர் 1899, வி. சரவணமுத்துப்பிள்ளை 1907)
- பதினெண்சித்தர் பெரிய ஞானக்கோவை என வழங்கும் சித்தர் பாடல்கள் (அரு இராமநாதன், 1959)
மேற்கோள்கள்
தொகு- ↑ * இந்துக்கலைக் களஞ்சியம் (பொ. பூலோகசிங்கம், 1990, கொழும்பு)
- ↑ * சித்தர்கள் கலைக் களஞ்சியம் (எஸ்.ஆர். சங்கரலிங்கனார், 1997, சித்தாசிரமம், சென்னை)
இணையத்தில் இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள்
தொகு- இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் பரணிடப்பட்டது 2007-11-24 at the வந்தவழி இயந்திரம்