மது (நடிகர்)

மலையாளத் திரைப்பட இயக்குநர்

மாதவ நாயர் என்று அறியப்படும் நடிகர் மது ஒரு சிறந்த பன்முக கலைஞர் . இவர் கதை ,வசனம் ,இயக்கம் மட்டுமல்ல சிறந்த படங்களை தயாரித்து வெளியிட்டரும் கூட . இவர் 1970 ஆண்டு முதன் முதலான இயக்கிய ப்ரியா என்ற படம் தேசிய அளவில் விருதையும், நன்மதிப்பையும் பெற்றுத் தந்தது

மது
2008ல் திரைப்பட சங்க சந்திப்பில்
பிறப்புசெப்டம்பர் 23, 1933 (1933-09-23) (அகவை 90)
பணிதிரைப்பட நடிகர்
வாழ்க்கைத்
துணை
லட்சுமி
பிள்ளைகள்உமா
2008 ல் அம்மயுடைய சந்திப்பில் மோகன்லாலும்

பிறப்பும் ,இளமைப்பருவமும்

தொகு

நடிகர் மது என்ற மாதவ நாயர் 1933 செப்டம்பர் 23 இல் திருவனந்தபுரத்தில் உள்ள கௌரிசப்பட்டம் என்ற இடத்தில் பிறந்தார் . இவர் திருவனந்தபுரத்தில் நகரமேயராக இருந்த ஆர் .பரமேஸ்வரன் தந்தைக்கும் ,கமலம்மா என்ற தாய்க்கும் தலை மகனாய் பிறந்தவர் ஆவார் . இவர் உடன் பிறந்த சகோதரிகள் நால்வர் .ஆரம்ப கல்வியை திருவனந்தபுரம் குண்ணுக்குழியில் உள்ள எல் .பி.பள்ளியிலும் ,புகுமுக வகுப்பை எம் .ஜி .கல்லூரியிலும் , பட்டம் மற்றும் ஹிந்தியை திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரியிலும் கற்றார் .பின்னர் ஹிந்தி முதுநிலை படிப்பை பனாரஸ் பல்கலை கழகத்தில் படித்து பட்டம் பெற்றார்

ஆசிரிய பணியும் , திரைப்பட வாழ்க்கையும்

தொகு

இவர் நாகர்கோவிலில் எஸ் . டி .ஹிந்து கல்லூரியில் ஹிந்தி விரிவுரையாளராக பணியாற்றினார் .அவ்வமயம் திருவனந்தபுரம்நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமா என்ற நிறுவனத்தில் நடிப்பு பயிற்சி பெறுவதற்காக வேலையை உதறி விட்டார் . அங்கு தான் அவர் ராமு காரியட் டை சந்தித்தார் . அப்போது தயாரிப்பில் இருந்த மூடுபடம் திரைப்படத்தில் முதன் முதலாய் நடித்தார் . ஆனால் சற்று தாமதித்தே அப்படம் 1963 இல் வெளிவந்தது . இவர் நடிப்பில் வெளி வந்த முதல் மலையாள திரைப்படம் " நினமணிஞ்ச கல்பா துகள் "

1964 இல் வெளிவந்த பார்கவி நிலையம் என்ற திகில் படம் இவருக்கு நல்ல பெயர் வாங்கி தந்தது . என்றாலும் இந்த காலகட்டத்தில் பிரேம் நசீர் ,சத்தியன் இவர்களே மலையாள படத்தை ஆண்டு கொண்டிருந்தனர் ..எனவே இவர் பல படங்களில் இரண்டாம் கதாநாயகனாகவே வலம் வந்தார் .. இந்நிலையில் சி .ராதாகிருஷ்ணன் எழுதிய "' தேவி டிஸ்சி" என்ற நாவலை அடிப்படையாக கொண்டு விபச்சாரிகள் வரலாற்று படமாக இயக்கினார். அதில் இவரே வில்லத்தனமான கதாநாயகன் . படத்தின் பெயர் ப்ரியா . இதில் வங்காள நடிகை லில்லி சக்கரவர்த்தி கதாநாயகியாகவும் , ஜெயபாரதி துணை நடிகையாகவும் நடித்திருந்ததார் இந்த படம் மும்பையில் சிவப்பு விளக்கு பகுதியிலும் படமாக்கப்பட்டது . இப்படம் ராஜகோபால் ,பெஞ்சமின் ,ராமச்சந்திரா,மற்றும் எல் .சி .கபூர் ஆகிய நான்கு ஒளிப்பதிவாளர்களால் படமாக்க பட்டு கேரளா அரசின் விருதையும் , இந்திய அளவில் இரண்டாவது சிறந்த படம் என்று 1970 இல் அறிவிக்கப்பட்டது

மதுவின் வாழ்க்கையில் மறக்கமுடியாத இன்னொரு படம் செம்மீன் .இதில் காதலில் தோல்வியுற்றது போன்ற நடிப்பில் சபாஷ் பெற்றார் .. கதாநாயகனை விஞ்சிய நடிப்பாற்றலால் , இதில் மது பங்களித்திருந்தார் .இந்த திரைப்படம் எட்டு லக்ஷம் செலவில் தயாரிக்கப்பட்டது .கேரளா பிலிம் கார்ப்பரேஷன் 6 லட்சமும் ,மீதியை நண்பர்களிடமும் வசூல் செய்து இது முடிக்கப்பட்டது .சத்தியன் ரூ 12000 மது ரூ 2000 என்று பங்களித்திருந்தனர். இப்படம் 40 லட்ச ரூபாய் வசூல் ஈட்டியது

1969 இல் மது ,அமிதாப் பச்சனோடு சாட் ஹிந்துஸ்தானி திரைப்படத்தில் நடித்துள்ளார் தமிழில் மூன்று படங்கள் .சிவாஜிகணேசனுடன் " பாரதவிலாஸ்" ரஜினியுடன் " தர்மதுரை " மற்றும் ஒரு பொண்ணு ஒரு பையன் 2007

2013 ஆம் ஆண்டு பத்மசிறீ விருது பெற்றுள்ளார்.

விருதுகள்

தொகு
  • 1980 கேரள அரசின் சிறப்பு விருது
  • 1995 குழந்தைகளுக்கான சிறந்த திரைப்படத் தயாரிப்பில் (மினி என்ற திரைப்படம்)
  • 2013 பத்மசிறீ விருது[1]

சான்றுகள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-01-29. பார்க்கப்பட்ட நாள் 2013-10-21.

http://www.thehindu.com/features/cinema/old-is-gold-priya-1970/article3387630.ece

"https://ta.wikipedia.org/w/index.php?title=மது_(நடிகர்)&oldid=3566412" இலிருந்து மீள்விக்கப்பட்டது