மத்கூர்

கருநாடக சிற்றூர்

மத்கூர் (Mathkur) என்பது இந்தியாவின், கருநாடகத்தின், பெங்களூர் வடக்கு பகுதிக்கு அருகே அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும். இது சிவகோட்டை ஊராட்சிக்கு உட்பட்டது. மத்கூரின் மொத்த மக்கள் தொகை 1,065 ஆகும். அவர்களில் பெரும்பாலோர் வேளாண் மக்களாவர். இந்த சிற்றூரில் உள்ள ஏரி சுமார் 67 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

இந்த சிற்றூர் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் (IIHR) மற்றும் காலேனள்ளிக்கு அருகில் அமைந்துள்ள இந்திய கருத்தியல் ஆய்வு மையத்திற்கும் (ICTS) அருகில் உள்ளது.

மத்கூரின் அண்டை சிற்றூர்களாக லிங்கனள்ளி, காலேனள்ளி, ஐவரகண்டபுரம், சீதகெம்பனள்ளி, ககோல் ஆகியவை உள்ளன.

வழிபாட்டு தலங்கள்

தொகு

1) வீரபத்ரசுவாமி கோவில். 2) சிவன் கோவில். 3) வெங்கடரமண சுவாமி கோவில். 4) ஆஞ்சநேய சுவாமி கோவில். 5) பூஜாம்மா கோவில்.

கல்வி நிறுவனங்கள்

தொகு
  • அரசு தொடக்கப்பள்ளி

போக்குவரத்து

தொகு

மத்கூரில் இருந்து பெங்களூர் மார்க்கெட் வரை 266A எண் பேருந்தும், மத்கூரிலிருந்து மெஜஸ்டிக் வரை 266J எண் பேருந்தும், மெஜஸ்டிக்கில் இருந்து ஹெஸ்சரகட்டவுக்கு மத்கூர் வழியாக 285DA என் பேருந்தும், தொட்டபல்லாபூரிலிருந்து ஹெஸ்ஸரகட்டாவிற்கு மத்கூர் வழியாக 253LA பேருந்தும், மத்கூரிலிருந்து மெஜஸ்டிக் வரை 251G பேருந்தும் செல்கின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மத்கூர்&oldid=3749559" இலிருந்து மீள்விக்கப்பட்டது