மத்தாடு என்பது சிறுமியர் ஆடும் விளையாட்டுகளில் ஒன்று.

தயிர் கடையும்போது மத்து வலப்புறமும் இடப்புறமும் சுழலும். பருப்புக் கடையும்போதும், கீரைக் கடையும்போதும் மத்து சட்டிக்குள் வட்டமிடும். இப்படி மத்து சுழல்வது போலச் சுழன்றாடுவது மத்தாடு விளையாட்டு.

சிறுமியர் வட்டமாக நின்று தோளைப் புடைத்துக்கொண்டு மத்தைப் போலச் சுழன்றாடி வருவர்; பாட்டுப் பாடிக்கொண்டு விளையாடுவர். சங்ககாலத்தில் இதுபோலப் பெரியவர்கள் ஆடுவதைத் துணங்கை என்றனர்.

இக்காலச் சிறுமியர் பாடல்
சோளச் சோளக் காட்டிலே
சோளம் அடிக்கிற வீட்டிலே
பந்தடி பந்தடி மீனாளே
பதக்குச் சோளம் நான் தாரேன்
சின்னச் சின்ன மூக்குத்தி
சித்தப்பா போட்ட மூக்குத்தி
அத்தை போட்ட மூக்குத்தி
அரைப்பணத்து மூக்குத்தி
கல்யாண வாசலிலே
கண்டெடுத்த மூக்குத்தி
சீமந்த வாசலிலே
தேடித் தந்த மூக்குத்தி

இப்படியெல்லாம் பாட்டு நீளும்.

இவற்றையும் பார்க்க

தொகு

கருவிநூல்

தொகு
  • இரா.பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980
"https://ta.wikipedia.org/w/index.php?title=மத்தாடு&oldid=1017367" இலிருந்து மீள்விக்கப்பட்டது