துணங்கைக் கூத்து

துணங்கைக் கூத்து என்பது பண்டைத் தமிழகத்தில் மகளிர் ஆடிய ஒரு ஆடல் வடிவம் ஆகும். பெண்கள் பலர் கூடிக் கை கோர்த்து ஆடும் கூத்து இது. இளம் பெண்கள் இறை வழிபாட்டோடு தொடர்புடையதாக இதனை ஆடியிருக்கலாம் என்று கருதப்படுகின்றது. இசையோடு கூடி அதற்கு அமைவாகவே இவ்வாடல் இடம்பெற்றது என்பதைப் பழந்தமிழ் நூல் சான்றுகள் காட்டுகின்றன.

தமிழ் இலக்கியங்களில் துணங்கை பற்றிய குறிப்புகள்

தொகு
தாம் உம் பிறர் உம் உளர் போல் சேறல்
முழவு இமிழ் '''துணங்கை''' தூங்கும் விழவின்
யான் அவண் வாரா மாறு ஏ வரின் ஏ வான் இடை
தணந்ததன் தலை உம் நீ தளர் இயல் அவரொடு
'''துணங்கை'''யாய் என வந்த கவ்வையின் கடப்பு அன்று ஓ
ஒளி பூத்த நுதலாரோடு ஓர் அணி பொலிந்த நின்

நினக்கு ஒத்த நல்லாரை நெடு நகர் தந்து நின்
தமர் பாடும் '''துணங்கை''' உள் அரவம் வந்து எடுப்பும் ஏ
வாராய் நீ துறத்தலின் வருந்திய எமக்கு ஆங்கு ஏ

முன் அடி பணிந்து எம்மை உணர்த்திய வருதி மன்
நிரை தொடி நல்லவர் '''துணங்கை''' உள் தலை கொள்ள
கரை இடை கிழிந்த நின் காழகம் வந்து உரையா கால்
மள்ளர் குழீஇய விழவினான் உம்
மகளிர் தழீஇய '''துணங்கை'''யான் உம்
யாண்டு உம் காணேன் மாண் தக்கோனை

வணங்கு இறை பணை தோள் எல் வளை மகளிர்
'''துணங்கை''' நாள் உம் வந்தன அ வரை
கண் பொர மற்று அதன் கண் அவர்


இவற்றையும் பார்க்கவும்

தொகு
குரவை, துணங்கை, தழூஉ - ஆட்டங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=துணங்கைக்_கூத்து&oldid=1160789" இலிருந்து மீள்விக்கப்பட்டது