மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம்
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (Central Leather Research Institute, CLRI) என்பது இந்திய அரசினால் தோல் ஆராய்ச்சிக்காக நிறுவப்பட்டது. உலகளவில் தோல் ஆராய்ச்சி தொடர்பான அதிக உரிமங்களையும் ஆய்வுத்தாள்களையும் கொண்டுள்ளது.[1][2] அறிவியல் மற்றும் தொழில் ஆய்வுக் குழுவின் கீழ் 1948 ஆம் ஆண்டு, 24 ஏப்பிரல் அன்று நிறுவப்பட்டது.[3]
செயற்பாடுகள்
தொகுதோல் தொழிற்சாலையின் வளர்ச்சியே இதன் முதன்மை நோக்கு. புதுமையான தோல் பதனிடும் தொழில் முறைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்கிறது.[4] தோல் பதனிடுதல் தொடர்பான பயிற்சிகளும் தொழினுட்ப உதவிகளும் இங்கு வழங்கப்படுகின்றன.
இந்நிறுவனம் வேதியியல், உயிரியல், பொறியியல், தகவல் தொழினுட்பவியல் போன்ற பிரிவுகளையும் கொண்டுள்ளது. தலைமையகம் சென்னையிலும், மண்டல ஆய்வகங்கள் அகமதாபாத், ஜலந்தர், கான்பூர், கொல்கத்தாவிலும் உள்ளன.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bioprocessing To Rid Leather of Environmental Hazards". தி பினான்சியல் எக்சுபிரசு. 16 பிப்பிரவரி 2004. http://www.financialexpress.com/news/bioprocessing-to-rid-leather-of-environmental-hazards/99760/. பார்த்த நாள்: 17 ஆகத்து 2012.
- ↑ "CLRI signs MoU with UK university". Information Centre for Aerospace Science and Technology. Archived from the original on 2014-07-09. பார்க்கப்பட்ட நாள் 18 ஆகத்து 2012.
- ↑ "CLRI – About Us". Central Leather Research Institute. பார்க்கப்பட்ட நாள் 17 ஆகத்து 2012.
- ↑ Singer, Hans Wolfgang (1977). Technologies For Basic Needs, Volume 22. Geneva: பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு. pp. 150–151.
- ↑ "CLRI – Departments". Central Leather Research Institute. பார்க்கப்பட்ட நாள் 17 August 2012.